பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய அடுத்த முக்கிய நடிகை – கடுப்பாகி இயக்குனர் போட்ட பதிவு.

0
771
praveen
- Advertisement -

சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வாக சின்னத்திரை தொடர்கள் அமைந்துள்ளது. அதிலும் கொரோனா லாக் டவுனில் இருந்து அனைவரும் சின்னத்திரை சீரியலை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார். மேலும், புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனிடையே வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரினாவுக்கு குழந்தை பிறந்திருப்பதால் சீரியலில் இருந்து அவருடைய காட்சிகள் மட்டும் காண்பிக்காமல் இருந்தார்கள்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரினா மீண்டும் வில்லியாக சீரியலில் என்றி கொடுத்து விட்டார். இந்நிலையில் தற்போது சீரியலில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கண்மணி மனோகரன். இவர் ஆரம்பத்தில் சீரியலில் வில்லத்தனங்கள் செய்து வந்தார். பின் பாரதியின் தம்பி அகிலை அஞ்சலி திருமணம் செய்து கொள்கிறார். இருந்தாலும் இவர் தன் அக்காவை பழிவாங்குவதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is kanmani44444.jpg

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி ரோல்:

பின் அஞ்சலி கர்ப்பமாக இருக்கும் போது மனம் திருந்தி கண்ணம்மாவிற்கு ஆதரவாக நின்று வருகிறார். இப்படி பாசிட்டிவாக இவருடைய கதாபாத்திரம் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் சில வாரங்களாகவே பாரதி கண்ணம்மா சீரியல் அஞ்சலியை பார்க்க முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் இருந்து கண்மணி விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

விலகிய கண்மணி :

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் விரைவில் வேறொரு ப்ராஜெக்டில் உங்களை என்டர்டைன்மென்ட் செய்கிறேன் என்று கண்மணி பதிவு ஒன்றை செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் சோகத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அய்யய்யோ எத்தனை பேர் மாற்றம், முடியவில்லை என பதிவு போட ரசிகர்களும் ஏன் இப்படி மாறுகிறார்கள் என தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisement