குடும்ப குத்து விளக்கா இருக்கும் பாரதி அம்மாவா இளம் வயதில் இப்படி எல்லாம் நடித்துள்ளார்.

0
573
- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். பின் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருப்பதால் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி ரோலில் நடித்த கண்மணி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலையில் தான் வகித்து வருகிறது. மேலும், சில மாதங்களாகவே சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சீரியலில் டிஎன்ஏ ரிசல்ட்டில் லக்ஷ்மி, ஹேமா தனக்கு பிறந்த குழந்தைகள் தான் என்ற உண்மை பாரதிக்கு தெரிய வந்தவுடன் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், கண்ணம்மாவும் குழந்தைகளும் நீங்கள் எங்களுக்கு வேண்டாம் எங்களை தனியாக வாழ விடுங்கள் என்று சென்று விடுகிறார்கள்.

சீரியலின் கதை:

மேலும், கண்ணம்மா தன்னுடைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன்னுடைய தந்தையின் பூர்வீக ஊருக்கே வந்து விடுகிறார். பாரதி கண்ணம்மாவை தேடி அலைகிறார். இறுதியில் கண்ணம்மா இருக்கும் இடத்தை பாரதி கண்டுபிடித்து கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், கண்ணம்மா முடியாது என்று மறுக்கிறார். பின் இருவரும் பேசி இருப்பதை பார்த்து ஊர் மக்கள் பஞ்சாயத்து நடத்துகிறார்கள். அப்போது கண்ணம்மா நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று கூறுகிறார். ஆனால், பாரதி நான் கண்ணம்மாவையும் குழந்தையும் அழைத்துக் கொண்டுதான் செல்வேன் என்று கூறுகிறார்.

-விளம்பரம்-

நடிகை ரூபாஸ்ரீ குறித்த தகவல்:

இதனை அடுத்து பாரதி தன்னுடைய சென்னைக்கு திரும்பி செல்வாரா? இல்லை அதே ஊரில் இருந்து கண்ணம்மாவை சமாதானம் செய்வாரா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியின் அம்மாவாக நடிப்பவர் நடிகை ரூபா ஸ்ரீ. இவர் தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை ரூபா ஸ்ரீ கவர்ச்சி புகைப்படம்:

இவர் கள்ளனும் போலீசும் என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதன் பின் இவர் பலமொழி படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் குண சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் சில படங்களில் கவர்ச்சி நடிகை ஆகவும் இவர் நடித்திருக்கிறார். சினிமா வாய்ப்பு குறைந்த உடன் இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் 26 வருடங்களுக்கு முன்னர் இவர் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் இவர் படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலருமே பாரதியின் அம்மா சௌந்தர்யாவா இது! என்று வாயடைத்து கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement