வேறு சேனலின் சீரியலில் என்ட்ரி கொடுத்த பரீனா – வைரலாகும் புகைப்படம் (அப்போ பாரதி கண்ணம்மா சீரியல் நிலை ?)

0
551
venba
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது. அதில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. அதுமட்டுமில்லாமல் இல்லத்தரசிகளின் பேவரேட்களில் ஒன்றாகவும் பாரதி கண்ணம்மா உள்ளது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். பொதுவாகவே சீரியல்களுக்கு ஹீரோ-ஹீரோயின்கள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் வில்லிகள் தான். வில்லி இருந்தால் மட்டுமே தான் ஹீரோ ஹீரோயின்களுக்கு அங்கு வேலை. அந்தவகையில் பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் வெண்பா கதாபாத்திரம் என்று சொல்லலாம்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா வெண்பா:

இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. இவர் இதற்கு முன்னாடி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது நடிகையாக மிரட்டி வருகிறார். இதனிடையே இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், கடந்த ஆண்டு இவர் கர்ப்பமாக இருந்தார்.

பரினா கர்ப்பமாக இருந்தது:

அதுமட்டுமில்லாமல் குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை சூட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார். இதனால் சின்னத்திரை வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் இவர் பாராட்டைப் பெற்றிருந்தார். மேலும், இவர் கர்ப்பமாக இருக்கும் போது சீரியலை விட்டு விலக விலக போகிறார் என்று சொன்னவுடன் பலரும் வருத்தப்பட்டு இருந்தார்கள். ஆனால், குழந்தை பிறந்த பிறகு பரினா மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்தவுடன் பலரும் தங்கள் சந்தோஷத்தை ஷேர் பண்ணி இருந்தார்கள். இவருக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த பரினா:

மீண்டும் பரினா சீரியலில் வெண்பாவாக கலக்கி கொண்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் வேறு ஒரு சேனலுக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் தொடர் அபி டெய்லர். இந்த சீரியலில் ரேஷ்மா, மதன் நடித்து வருகிறார்கள். தற்போது இந்த தொடரில் பரினா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அதற்கான புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

பரினா நடிக்கும் புது சீரியல்:

இதனை பார்த்த உடன் ரசிகர்கள் அனைவரும் அப்போ நீங்கள் பாரதிகண்ணம்மாவில் இருந்து வெளியேறி விடுவீர்களா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பரினா தரப்பில் இருந்தும் பாரதிகண்ணம்மா சீரியல் குழுவில் இருந்தும் என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். அது மட்டுமில்லாமல் பரினாவுக்கு கலர்ஸ் தமிழ் புதிது இல்லை. இவர் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான தறி என்ற சீரியலில் நடித்து இருந்தார். தற்போது அபி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisement