பாரதி கண்ணம்மா சீசன் 1 பிரபலம் திடீர் மரணம் – பாவம் எப்படி இறந்துள்ளார் பாருங்க

0
1341
vijayalakshmi
- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீரென்று இறந்திருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரின் முதல் பாகத்தில் பாரதியாக அருண் பிரசாத், கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து இருந்தார்கள். பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவுக்கு வந்தது. பின் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்பதற்கு ஏற்ப இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பாரதி கண்ணம்மா தொடர் முதல் பாகம் முடிந்த கையோடு இரண்டாம் பாகம் துவங்கி இருக்கிறது.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இந்த இரண்டாம் பாகத்தில் பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, வெண்பா, அஞ்சலி போன்ற முந்தைய சீசன் கதாபாத்திரங்களின் பெயர்களையே இரண்டாவது சீசனிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெயர்களையே மட்டும் இல்லாமல் கண்ணமாவாக முதல் சீசனில் நடித்த நடிகை வினுஷா தேவி நடிக்கிறார். பாரதியாக ரோஜா சீரியல் நாயகன் சிபு சூர்யன் நடிக்கிறார். சீரியலில் பாரதி பெரிய வீட்டு பிள்ளை. ஆனால், இவருடைய தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டார்.

பாரதி கண்ணம்மா 2 சீரியல்:

இதனால் பாரதி படிக்காமல் குடி கும்மாளம் அடிதடி என்று தன் நண்பர்களுடன் சுற்றி கொண்டு இருக்கிறார். மறுபுறம் கதாநாயகி சித்ரா மத்திய சிறைச்சாலையில் இருந்து வெளியில் வந்து கண்ணம்மாவாக மாறுகிறார். பின் பாரதி -கண்ணம்மா அறிமுகம் ஏற்படுகிறது. தொடக்கத்திலே இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. ஆனால், இருவருக்கும் மத்தியில் காதல் ஏற்படுகிறது. இப்படி போன சீசனாக்கும் இந்த சீசனுக்கு சம்மந்தம் இல்லாமல் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

நடிகை விஜயலக்ஷ்மி:

இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை இறந்திருக்கும் தகவல் தற்போது ரசிகர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி புகழ்பெற்ற சரவணன் மீனாட்சி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி. இவர் இதற்கு முன்பு பல தொடர்களில் நடித்து இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது பாரதி கண்ணம்மா சீரியல் தான். தற்போது இவருக்கு 70 வயதாகிறது. கடந்த சில மாதங்களாக விஜயலட்சுமி அவர்கள் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

விஜயலக்ஷ்மி மரணம்:

பின் சில தினங்களுக்கு முன்பு இவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலமாக அடியும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கும் இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்றுதான் இவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை இவர் தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கிறார். தற்போது இவர் இறந்திருக்கும் சம்பவம் அறிந்து சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் பலரும் நடிகை விஜயலட்சுமி மறைவிற்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement