நீ முஸ்லீம் தானா, தினமும் தொழுகாமல் இப்படி ஹராம் செய்றா – பரீனாவை விமர்சித்த நபர், அவரின் நச் பதிலடி.

0
271
Fareena
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சீரியல் என்றாலே ஹீரோ, ஹீரோயின்,வில்லி. சீரியலில் ஹீரோ- ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவுக்கு வில்லிக்கும் இருக்கிறது. ஹீரோ- ஹீரோயினுக்கு இணையாக வில்லி கதாபாத்திரம் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஹீரோயினை விட வில்லியின் இம்பாக்ட் தான் சீரியலில் பயங்கரமாக இருக்கும். அதிலும் சமீப காலமாக கதாநாயகிகளை விட வில்லிகள் தான் மக்கள் மத்தியில் அதிகம் இடம் படித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வரிசையில் விஜய் டிவியில் மோசமான வில்லியாக திகழ்பவர்கள் ராஜா ராணி அர்ச்சனா, பாரதி கண்ணம்மா வெண்பா. இவர்களையெல்லாம் ரசிகர்கள் திட்டித்தீர்த்த நாளே இருக்கிறது. அந்த வகையில் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவை நிஜயத்திலும் பலர் வில்லியாகவே தான் பார்த்து வருகின்றனர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

வெண்பாவாக மிரட்டும் பரீனா :

இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். இருப்பினும் குழந்தை பிறந்த சில மாதங்கள் வரையிலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். கர்ப்பமாக இருந்த போது பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார் பரீனா. இதனால் இவர் மீது சமூக வலைதளத்தில் ஹேட்டர்ஸ்களால் பல விதமான நெகட்டிவ் கமன்ட்சுகள் கூட வந்தது.

குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே பரீனா பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். தற்போது இவரது கதாபாத்திரத்தால் இவரை திட்டி தீர்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு வில்லியாக மிரட்டி வருகிறார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா பாகம் ஓன்று முடிந்து தற்போது இரண்டாவது சீசன் கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி விட்டது, இந்த சீசனிலும் பரீனா இருக்கிறார் என்ற சில நாட்கள் கழித்து அவரே தெரிவித்தார்.

-விளம்பரம்-

நெகட்டிவ் கமென்டிற்கு பதிலடி :

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பரீனா தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.2மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் தான் இன்று காலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நடித்திருந்த ப்ரோமோ ஒன்றை போட்டிருந்தார். பின்னர் அதற்கு பதிலளித்த பின்தொடர்பவர் மோசமாக எழுதியிருந்த புகைப்படத்தை பகிர்ந்து இது என்னுடைய வகையிலான காலை வணக்கம் என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அதனை தொடர்ந்து ரசிகர்களிடம் கேள்வி கேட்டிருந்தார் “அதற்கு ஒருவர் நீங்கள் முஸ்லீம் தானே, தினமும் தொழுகுவீர்கள் அல்லவா? பின்னர் ஏன் இப்படி கெடுதல் செய்கிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பரீனா “சமூக ஊடகங்களில் இருப்பது, டிவி சீரியல் பார்ப்பது, ஒரு பிரபலத்தைப் பின்தொடர்வது மற்றும் அவரைக் கேள்வி கேட்பது ஆகியவை கெடுதல் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. உன்னுடைய பின்புறத்தை சுத்தம் செய்து விட்டு என்னிடம் கேள்வி கேள் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிறது.

Advertisement