பரோட்டா சூரியின் மகன் திரைக்கு வருகிறார் – முதல் படமே பெரிய இயக்குனருடன்

0
1074
- Advertisement -

இயக்குனர் சுசீந்திரன் தற்போது ஏஞ்சலினா என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படம் குறித்து அவர் நேற்று பதிவிட்டுள்ள ஒரு டீவீட்டின் மூலம் பரோட்டா சூரியன் மகன் அந்த படத்தில் நடித்திருப்பது தெரியவருகிறது.

Anjalina movie

அந்த டீவீட்டில் அவர் கூறியிருப்பதாவது…நேற்று படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் சூரியின் மகன் சர்வான் சூரியுடன் சேர்ந்து நடித்தான். குழந்தைகளை நடிக்கவைப்பது என்பது எப்போதும் எனக்கு சந்தோசத்தை தரும். அதுவும் சூரியின் மகனை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவது எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

வெண்ணிலா கபடி குழு மூலம் சூரியை அறிமுகப்படுத்திய இயக்குனர் சுசீந்திரன் தற்போது சூரியனின் மகனையும் ஏஞ்சலினா படம் மூலம் அறிமுகப்படுத்துகிறார். நிச்சயம் சூரிக்கு இது மிகப்பெரிய சந்தோசத்தை தந்திருக்கு என்பதில் ஐயம் இல்லை.

Advertisement