மலையாள மொழியில் ஜோதிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் பொன்மேன். இணைத்த படத்தில் பாசில் ஜோசப், சஜின் கோபு மற்றும் லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். டார்க் காமெடியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஆனந்த் மன்மதன் கொல்லத்தைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய சகோதரி லிஜோமோல் ஜோஸ், தாய் சந்தியா ராஜேந்திரன் உடன் வாழ்ந்து வருகிறார். எப்படியாவது தன்னுடைய மகன் மகளின் திருமணத்திற்கு நகை சேர்க்க வேண்டும் என்று ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார் தாய் சந்தியா.
அதோடு மாப்பிள்ளை வீட்டாரோ நகை விஷயங்களில் ரொம்ப கண்டிப்பாகவும், அதிகமாகவும் கேட்பதால் லிஜோ தாய் ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் சகோதரர் ஆனந்த் மன்மதன் தங்கையின் திருமணத்தை பற்றி கவலை கொள்ளாமல் கட்சிப் பணியில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். அதற்குப்பின் தன்னுடைய நண்பர்கள் மூலமாக
தன்னுடைய தங்கையின் திருமணத்திற்கு 25 சவரன் நகையை பெறுவதற்கு ஏற்பாடு செய்கிறார். அப்போது ஹீரோ பேசில் ஜோசப் நகை கடையில் வியாபாரிகளாக இருக்கிறார். இவர் லிஜோவுக்கு நகை கொடுக்கிறார். ஆனால், திருமணமான அடுத்த நாளே அந்த நகைக்கான பணத்தை திருப்பி கொடுத்த விட வேண்டும் என்று ஒப்பந்தமும் போடுகிறார்.
திருமணம் முடிந்தும் நகையை திருப்பிக் கொடுக்க முடியாமல் லிஜோ குடும்பம் ரொம்பவே தவிக்கிறது. லிஜோ கணவர் நகையை திரும்ப கொடுக்க மறுக்கிறார். தன்னுடைய முதலாளிக்கு பதில் சொல்ல முடியாமல் ஹீரோ பேசில் ஜோசப் பயந்து ஓடுகிறார். அதற்குப்பின் அவர் பல பிரச்சினைகளை சந்திக்கிறார். இந்த இக்கட்டான சூழலில் இருந்து ஹீரோ பேசில் ஜோசப் தப்பித்தாரா? லிஜோ குடும்பம் நகையை கொடுத்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
படத்தின் ஆணி வேர் லிஜோ உடைய கதாபாத்திரம்தான். இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய கணவராக வரும் சஜின் கோபு வில்லனாகவே மிரட்டி இருக்கிறார்.
இவர்களை அடுத்து படத்தில் ஹீரோ பேசில் ஜோசப் தன்னுடைய தோளில் படத்தை சுமந்து சென்றார் என்று சொல்லலாம். இவரின் நடிப்புதான் படத்திற்கு பக்க பலமே. நகையை எப்படியாவது மீட்டு முதலாளியிடம் கொடுக்க வேண்டும் என்று அவர் போராடும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மேலும், திருமண வீட்டில் நடக்கும் காமெடி, எமோஷனல் என அனைத்தையும் இயக்குனர் சிறப்பாக கொடுத்து இருக்கிறார். அறிமுக இயக்குனராக இருந்தாலும் கதைக்களத்தை அருமையாக எடுத்து இருக்கிறார். இந்த படம் எழுத்தாளர் இந்து கோபனின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆனால், படத்தில் திருப்பங்கள் என்ற பெயரில் இயக்குனர் சொல்லி இருக்கும் விஷயம் தான் படத்திற்கு பலவீனமே.
நிறைய காட்சிகள் பார்வையாளர்களை பதைபதைப்புடன் இயக்குனர் வைத்திருக்கிறார். வரதட்சணை கலாச்சாரம், ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்க போது ஏற்படும் பிரச்சினை ஆகிய ஆழமான கருத்தை அழுத்தமாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் பாராட்டியாக வேண்டும். அதோடு சில வசனங்களையும் அழுத்தமாக சொல்லி இருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது. ஆனால், எமோஷனல் ஆக்சன் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக பொன்மேன் இருக்கிறது.
நிறை:
நடிகர்களின் நடிப்பு
பின்னணி இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது
கதைக்களம் ஓகே
டார்க் காமெடி நன்றாக இருக்கிறது
குறை:
சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
பாடல்கள் பெரிதாக கவரவில்லை
எமோஷனல் ஆக்சன் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
மொத்தத்தில் பொன்மேன் – 24 கேரட் இல்லை