திருமணத்திற்கு முன்பாகவே அனிருத்துடன் ஐஸ்வர்யாவுக்கு உறவு இருந்தது – சர்ச்சையை கிளப்பிய நடிகர்.

0
1436
anirudh
- Advertisement -

சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தான் பேசிக் கொண்டிருக்கின்றது. சோசியல் மீடியாவை ஓபன் பண்ணினாலே போதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து பற்றிய கருத்துக்களும், வீடியோக்களும் தான் உலா வந்து கொண்டிருக்கின்றது. அதே போல் கடந்த ஆண்டு முழுவதும் சோசியல் மீடியாவில் நடிகை சமந்தா- நாக சைதன்யா விவகாரத்து பற்றிய பேச்சு தான் அதிகம் இருந்தது. இந்த சர்ச்சை முடிவதற்குள் நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
Aishwarya R. Dhanush, Selvaraghavan, Anirudh Ravichander, Dhanush

தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து விமர்சனம்:

மேலும், தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் நடுவில் என்ன நடந்தது? என்று தெரியாமல் பலரும் பல விதமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணம் அனிரூத் தான் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் பயில்வான் ரங்கநாதன் எப்போதும் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மீது சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி:

சமீபத்தில்கூட பிரபல நடிகை குறித்து தேவையில்லாமல் விமர்சித்துப் பேசி இருந்தார். இப்படி பல நடிகர்களை பற்றி விமர்சித்து பேசி வந்த பயில்வான் ரங்கநாதன், தனுஷ்- ஐஸ்வர்யா விரிசலுக்கு அனிருத் தான் காரணம் என்று குற்றம் சாட்டி பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பது, இசை அமைப்பாளர் அனிருத் அவர்கள் ஐஸ்வர்யா தனுஷிற்கு முறைப்பையன். திருமணத்திற்கு முன்பே ஐஸ்வர்யா, அனிருத்துடன் தொடர்பில் இருந்தார். ஐஸ்வர்யாவும், அனிருத்தும் கட்டிப் பிடித்து கன்னத்தோடு கன்னம் உரசி கொண்ட படங்கள் எல்லாம் வெளிவந்திருந்தது.

-விளம்பரம்-

தனுஷ் விவாகரத்துக்கு அனிரூத் தான் காரணம்:

இது ஆரம்பத்தில் விளையாட்டாக, உறவுக்கார பையன் என்று தான் நினைத்திருந்தார்கள். அதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே ரொம்ப நெருக்கமாக பழக்கம் சென்றது. இதை தனுஷ் கண்டித்தார். ஆனால், அதை ஐஸ்வர்யாவும் அனிருத்தும் கண்டுகொள்ளவில்லை. பின் தனுஷிற்கும் அனிருத்திற்கும் இடையேயான நட்பு பிரிந்தது. இதனால் சமீப காலமாகவே அனிருத்தும் தனுசும் பேசிக்கொள்ளவில்லை. இதற்கு காரணம் ஐஸ்வர்யா தான். அதுமட்டுமில்லாமல் தனுஷ் பலருடன் உறவில் இருந்ததை ஐஸ்வர்யா நம்பினார்.

வைரலாகும் பயில்வான் ரங்கநாதன் வீடியோ:

அது மட்டுமில்லாமல் தனுஷ் போதைக்கும் அடிமையானார். இப்படி இரண்டு பக்கமும் பலவீனங்கள் அதிகம் என்று கூறி இருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் கண்டித்தும் விமர்சித்தும் வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தனுஷின் திருமணத்தின் போது அனிருத் இருந்த புகைப்படத்தை பதிவிட்டு இவ்வளவு இளமையாக இருக்கும் அனிரூத்தை பார்த்து எப்படி இவ்வளவு கேவலமாக பேசுகிறீர்கள்.

கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்:

ஒருவர் மீது பொய்யான பதிவை பதிவிடாதீர்கள். வாய் இருப்பது என்பதற்காகவும், சோசியல் மீடியா இருக்கிறது என்பதற்காகவும் எதை வேண்டுமானாலும் பேசலாமா? ஒரு நல்ல உறவில் இப்படி தேவையில்லாமல் சர்ச்சைகளை கிளப்புவதா? என்று பலரும் கண்டித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது பழிபோடும் பயில்வான் ரங்கநாதன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். தற்போது இந்த பதிவுகள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement