மகாலட்சுமியா மூதேவியா, எல்லாம் அது வந்த நேரம் – ரவீந்தர் கைதால் மஹாலக்ஷ்மியை சாடிய பயில்வான்

0
957
- Advertisement -

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் புழல் சிறையில் கம்பி எண்ணுவது குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசனில் வனிதா குறித்த இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த ஆண்டு நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்களது திருமண செய்தி வெளியானத்தில் இருந்தே சமூக வளைத்தளத்தில் கேலிக்கு உள்ளாகி இருந்தது. ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரவீந்தர் சந்திரசேகரன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தகவல் தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

ரவீந்தர் செய்த மோசடி:

அதாவது, திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மோசடி ஆவணங்களை காண்பித்து 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இது குறித்து பலருமே விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது, திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் பிறவிலேயே ஒரு மிகப்பெரிய பணக்காரர். அவர் மூன்று படங்கள் வரை தயாரித்திருக்கிறார்.

ravindar

பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி:

அதுவும் அவருடைய சொந்த பணத்தை வைத்து தான் படங்களை தயாரித்தார். ஆனால், அந்த படங்கள் எதிர்பாத்தளவிற்கு வெற்றி அடையாமல் நஷ்டம் தான் அடைந்தது. பின் இவர் திடக்கழிவுகளில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதில் அவர் பல கோடி ரூபாய் தில்லுமுல்லு செய்திருக்கிறார். விசாரணையில் அவருக்கு எதிராக ஆதாரங்கள் நிறைய இருக்கிறது என்று சொல்லி புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதற்கிடையில் தான் ரவீந்தர் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி அழகான பெண்.

-விளம்பரம்-

மகாலக்ஷ்மி திருமணம் குறித்து சொன்னது;

பேர் மட்டும் இல்லை அவர் பார்ப்பதற்கே மகாலட்சுமி போல் தான் இருப்பார். அனைவருமே அவரின் பின் ஜொல்லு விட்டு திரிந்தார்கள். இப்படி இருக்கும் போது இவர் திருமணம் ஆன நபரை திருமணம் செய்து கொண்டது பலருக்குமே ஷாக்கிங். இவர்களுடைய திருமணம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாக பேசப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. இருந்தும் ரவீந்தர் திருமணம் செய்து கொண்டார். மேலும், ரவீந்தர் தயாரிப்பில் மகாலட்சுமி படம் நடித்துக் கொண்டிருந்தார்.

மகாலக்ஷ்மியை வெளுத்து வாங்கிய பயில்வான்:

அப்படித்தான் இவர்களுக்கு இடையில் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். வீட்டிற்கு மகாலட்சுமி வந்தால் ஆஆ, ஓஹோ எனது குடும்பம் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், இவர் வீட்டிற்கு வந்த மூதேவி. வந்த கொஞ்ச நாட்களிலேயே புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா என்று ரவீந்தர் வீட்டில் உள்ள பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். தற்போது ரவீந்தர் புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் பல பேரை கிழித்து தொங்கவிட்ட ரவீந்தர் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணுவது கொஞ்சம் வருத்தத்துக்குரிய விஷயம் தான் என்று பேசி இருக்கிறார்.

Advertisement