பார்ட்டியில் விஷால் செய்தது பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், சூட், பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி இருந்தது. சோசியல் மீடியாவிலும் இப்படம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது. அதன் பின் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்று இருந்தது.
மதகஜராஜா படம்:
அப்போது விஷால் மேடை ஏறி பேசிய போது அவருடைய கை, கால்கள் நடுங்கி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. இது தொடர்பாக நிறைய சர்ச்சைகள் வந்தது. அதற்கு விஷாலும் விளக்கம் கொடுத்து இருந்தார். மேலும், மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் இப்படம் பெற்றுள்ளது. இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி உட்பட பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றியையும், சுந்தர்.சியின் பிறந்த நாளையும் சமீபத்தில் பார்ட்டி வைத்து கொண்டாடி இருந்தார்கள்.

சுந்தர்.சி பார்ட்டி:
இந்த பார்ட்டில் குஷ்பூ, சுந்தர்.சி, மதகதராஜா பட குழுவினர், மீனா, கே எஸ் சவீத்குமார், திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த பார்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதில் விஷால், மீனாவின் தோள்பட்டையில் கை போட்டு இருந்த புகைப்படம் தான் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை பார்த்து சிலர், விஷால் பார்ட்டில் குடிபோதையில் இருந்தார். அதனால் தான் அவர் மீனா தோள் மீது கை போட்டு இருந்தார் என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

பயில்வான் ரங்கநாதன் வீடியோ:
இந்நிலையில் இது குறித்து விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், பொதுவாகவே சினிமா துறையில் பார்ட்டி நடப்பது இயல்பான ஒன்றுதான். திருமணம், சக்சஸ் மீட், பிறந்தநாள், பட சூட்டிங் நிறைவு, படத்தின் வெற்றி விழா என அனைத்திலும் பார்ட்டி நடக்கும். அந்தப் பார்ட்டில் நடிகர், நடிகைகள் எல்லோருமே கலந்து கொள்வார்கள். அந்த வகையில் மதகதராஜா படம் வெற்றியை கொண்டாடும் வகையில் சுந்தர்.சி யின் பிறந்த நாளை முன்னிட்டு பார்ட்டி வைத்திருந்தார்கள். அந்த பார்ட்டில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=XGM9x4YfWjU
விஷால் பற்றி சொன்னது:
குறிப்பாக விஷால், மீனாவின் தோள்பட்டை மீது கை போட்டு இருந்தார். இது சில காலமாக சினிமாவில் இருக்கும் பழக்கம் தான்.
எந்த ஒரு பார்ட்டியிலும் ஒருவருக்கொருவர் கட்டிபிடித்து, கை கொடுப்பது வழக்கம் தான். இது தவறு எதுவும் இல்லை. அன்பின் வெளிப்படையில் வந்தது. அதுபோல் விஷால் பார்ட்டில் போதையில் இருந்ததாக கூறி இருந்தார்கள். ஆனால், அப்படியெல்லாம் கிடையாது. இப்போதுதான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி வருகிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி குடித்திருப்பார்? விஷால் தன்னுடைய புதிய படத்தினுடைய கதைகளை கேட்கும் விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று கூறியிருக்கிறார்.






