Home பொழுதுபோக்கு சமீபத்திய

வன்னியரசு போட்ட ஒரு டீவ்ட். மீரா மிதுனை போல பயில்வான் ரங்கநாதன் கைதாகுவாரா? காரணம் இந்த வீடியோ தான்.

0
365
Vanniarasu
-விளம்பரம்-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் வன்னியரசு போட்ட டீவ்ட்டால் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கைது ஆகுவரா? என்று சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார்கள். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

பயில்வான் ரங்கநாதன் பற்றிய விவரம்:

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான். மேலும், இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் சினிமா கிசுகிசு பற்றி பேச ஆரம்பித்த பின் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். சமீப காலமாக இவர் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் எப்படி நடிகர்களுக்கு விவாகரத்து ஆனது என்பது குறித்தும், நடிகைகளுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகளை பேசி வருகிறார்.

மீடு விவகாரத்தில் பயில்வான் ரங்கநாதன்:

இதனால் இவருடைய வீடியோக்களுக்கு பல லட்சம் வியூவர்ஸ் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் பாடகி சின்மயி குறித்து பயில்வான் ரங்கநாதன் பதிவிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. ஏனென்றால், பயில்வான் ரங்கநாதன் அவர்கள் மீடு புகார் அளிக்கும் நடிகைகள் குறித்து கொச்சையாக பேசி வீடியோ பதிவிட்டு இருக்கிறார். இதனால் பாடகி சின்மயி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் பயில்வான் மீது கடுமையாக கண்டனம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Bigg Boss Oviya Slams Bayilwan Ranganathan For Shaming Her

பயில்வான் குறித்து வன்னியரசு போட்ட டீவ்ட்:

இந்த நிலையில் பயில்வான் பேசிய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, பெண்ணின் மானத்தை பங்கம் விளைவிக்கும் உட்கருத்து கொள்ளப்பட்ட சொல் அல்லது சைகை, செய்கை போன்ற செயல்களும் சட்டம் 509 இன் கீழ் கைது செய்து ஓராண்டு அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம். பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்தும் இவனை குண்டர் சட்டத்தில் தள்ள வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.

மீரா மிதுன் வழக்கு:

இப்படி வன்னியரசு பதிவிட்டு இருக்கும் பதிவு சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் எதிராக வன்னிஅரசு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கில் கைதான மீராமிதுன் சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்தார். தற்போது அவர் அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை கைது செய்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயில்வான் குறித்து வன்னிஅரசு ட்விட்டரில் புகார் எழுப்பியிருக்கும் சம்பவத்தின் மூலம் பயில்வான் கைதாவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news