-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ஜெயம் ரவி- ஆர்த்தி ஜோடி விவாகரத்திற்கு இவர்தான் காரணமாம்- கொளுத்திப்போட்ட பயில்வான் ரங்கநாதன்

0
38

ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவுக்கு பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் காரணம்தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுடில் பிரபலமான ஜோடிகள் விவாகரத்து செய்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சமந்தா- நாக சைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யாவை தொடர்ந்து சமீபத்தில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த விவகாரம் முடிவதற்குள் பிரபல நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக வந்திருக்கும் செய்தி தான் தற்போது ரசிகர்களுக்கு பேரடியாக இருக்கிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் இவருடைய மூத்த மகன்ஆராவ் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி இருந்த ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜெயம் ரவி தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாக இருந்தது.

ஜெயம் ரவி- ஆர்த்தி சர்ச்சை:

தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக ஜெயம் ரவி- ஆர்த்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த பேட்டியில் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி குறித்து பெருமையாக பேசி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஜெயம் ரவி ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதற்குக் காரணம் ஆர்த்தி பயோவில் இருக்கும் தன்னுடைய கணவருடைய ஐடியை நீக்கி இருக்கிறார். அதேபோல், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜெயம் ரவியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை அனைத்தும் நீக்கி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஆர்த்தி.

பயில்வான் ரங்கநாதன்:

-விளம்பரம்-

இந்நிலையில்தான் ஜெயம் ரவி – ஆர்த்தி இடையே சண்டை ஏற்பட அவரது மாமியார் தான் காரணம் என பயில்வான் தெரிவித்துள்ளார். அதில், ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா மிகப்பெரிய பணக்காரர். கல்பனா ஹவுஸ் என்கிற பங்களாவின் ஓனரான சுஜாதா, தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். மேலும், ஆர்த்தியை திருமணம் செய்த பின்னர் வீட்டோடும் மாப்பிள்ளையாக இருக்கிறார் ஜெயம் ரவி. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியின் மார்க்கெட் சரிய தொடங்கியவுடன் அவரை வைத்து படம் தயாரிக்க தொடங்கினார் அவரது மாமியார் சுஜாதா.

-விளம்பரம்-

மோதலுக்கு காரணம்:

அப்படி அவர் தயாரித்த படம் தான் ‘சைரன்’. அந்தப் படம் தோல்வி அடைந்த நிலையில், அடுத்து பாண்டியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தார் சுஜாதா. அப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி ரூபாய் 25 கோடி சம்பளமாக கேட்டு உள்ளார். ஆனால், உங்களுக்கு அவ்வளவு மார்க்கெட் இல்லையே என்று மாமியார் சொல்லிவிட்டு, இயக்குனர் பாண்டியராஜை அழைத்து படத்தின் பட்ஜெட்டை குறைக்குமாறு கூறியிருக்கிறார். உடனே பாண்டிராஜ் வாங்கிய அட்வான்ஸ் திருப்பி கொடுத்துவிட்டு, அந்த கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி ஓகே செய்துள்ளார். இது ஜெயம் ரவிக்கு தெரிய வர, மனைவி ஆர்த்தியுடன் சண்டை போட்டு இருக்கிறார். இதுதான் விவாகரத்திற்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

ஜெயம் ரவி திரைப்பயணம்:

முதலில் இவர் 2003 ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதர் இயக்கத்திலும் வந்த ‘ஜெயம்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், சமீபகாலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இறுதியாக இவர்கள் நடிப்பில் வெளியான அகிலன், இறைவன், சைரன் போன்ற படங்கள் கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. தற்போது இவர் பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news