போலீஸ் ஸ்டேஷனில் கோபி, சிறைக்கு செல்வது யார்? – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
289
- Advertisement -

விஜய் டிவியில் டிஆர்பிஎல் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஷ், ரேஷ்மா, நேகா என்ன பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.

-விளம்பரம்-

விவாகரத்திற்கு பின் பாக்யா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்டாரன்ட் திறந்தார். இன்னொரு பக்கம் ராதிகா கர்ப்பமாக இருக்கிறார். பின் வீட்டில் எல்லோரும் இந்த உண்மையை தெரிந்து அதிர்ச்சி ஆகி கோபியை திட்டுகிறார்கள். ஈஸ்வரிக்கு, ராதிகா குழந்தையை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை, கலைத்துவிடு என்று சொல்கிறார். இறுதியில் கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்துக் கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று விடுகிறார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

கடந்த சில வாரங்களாக ஈஸ்வரி, ராதிகா அம்மா இடையே கலாட்டா கலவரங்கள் செல்கின்றது. ஈஸ்வரி வந்தது ராதிகா அம்மாவிற்கு பிடிக்கவில்லை. அதேபோல் ஈஸ்வரியும் வேணும் என்றே ராதிகா மற்றும் அவருடைய அம்மாவை வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். பின் ஈஸ்வரி ஒழுங்காக சாப்பிடாமல் மயக்கம் போட்டு விழுகிறார். இதனால் ராதிகா மீது பயங்கரமான கோபமடைந்த கோபி, தன்னுடைய அம்மாவை நன்றாக கவனித்துக் கொண்டிருக்கிறார். ஹோட்டல் வேலை பார்ப்பது, தன்னுடைய அம்மாவை கவனிப்பது என்று பம்பரம் போல கோபி சுத்தி வருகிறார்.

சீரியல் கதை:

இப்படி இருக்கும் நிலையில், கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்து விடுகிறார். இதனால் மருத்துவர்கள் ராதிகா கர்ப்பம் கலைந்து விட்டது என்று சொல்கிறார்கள். இதனைக் கேட்டு போகமடைந்த ராதிகா, உன் அம்மா தான் என்னை தள்ளிவிட்டார் என்று சொல்கிறார். குழந்தை வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி சொல்லி கடைசியில் என் குழந்தையை இல்லாமல் செய்து விட்டார் என்று கோபியிடம் சொல்கிறார். ராதிகா அம்மாவும் பயங்கரமாக ஈஸ்வரியை திட்டுகிறார். இதெல்லாம் கேட்ட கோபி, தன் அம்மா மீது கோபம் அடைகிறார்.

-விளம்பரம்-

வீட்டை விட்டு வெளியேறிய ஈஸ்வரி:

ஈஸ்வரியும் நான் எதையும் செய்யவில்லை. இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அழுகிறார். பின் கோபியிடம் ராதிகா உங்க அம்மா இருக்கும் வீட்டில் நான் இருக்க மாட்டேன் என்று சொல்கிறார். அதேபோல் வீட்டிற்கு வந்த ராதிகா, ஈஸ்வரியை பார்த்து வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்கிறார். ஈஸ்வரி அழுது கொண்டே கோபியிடம் நான் எந்த தவறு செய்யவில்லை என்று சொல்கிறார். ஆனால், கோபி தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி அழுது கொண்டே பாக்யா வீட்டிற்கு செல்கிறார். அங்கும் தன் மகன் செய்ததை நினைத்து ஈஸ்வரி கலக்கத்துடன் இருக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் கோபி:

இந்நிலையில், கோபி மீண்டும் குடிக்க தொடங்குவது போல ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது கோபி போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அமர்ந்திருப்பது போல இன்னொரு புகைப்படமும் வெளியாகி உள்ளது. ராதிகா மற்றும் அவரது அம்மா செய்யும் டார்ச்சரால் கோபி குடிபோதையில் ஏதோ செய்து போலீஸிடம் சிக்கினாரா? இல்லை ராதிகா தனது மாமியார் ஈஸ்வரி மீது போலீசிடம் புகார் கொடுக்கப் போகிறாரா? என்ற பரபரப்போடு பாக்கியலட்சுமி சீரியல் செல்கிறது.

Advertisement