கருப்பு நடிகர்களுடன் நடிக்க மறுத்த நதியா, ரஜினியுடன் மட்டும் நடிக்க காரணம் – பிரபல நடிகர் சொன்ன தகவல். வீடியோ இதோ.

0
700
vijayakanth
- Advertisement -

நடிகை நதியாவை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நதியா. இவருடைய இயற்பெயர் சரீனா அனூஷா. இவர் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவருடைய பூர்வீகம் கேரளா. அப்பா என்.கே.மொய்து. கேரளாவின் தல சேரியை சேர்ந்த முஸ்லிம். அம்மா லலிதா திருவல்லாவை சேர்ந்த இந்து. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும், 1984 ஆம் ஆண்டில் பாசில் தனது நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற திரைப்படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார்.

-விளம்பரம்-
nadhiya

ஷரீனா மொய்து என்ற இவரது பெயர் சினிமாவுக்கு சரியாக இருக்காது என்று நதிபோல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பொருளில் நதியா என்று இவருக்கு பெயர் வைத்தார். பிறகு அதுவே அவரது பெயராக மாறியது. மேலும், நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் மோகன்லால் நடித்திருந்தார். அதனை தான் தமிழில் பூவே பூச்சூடவா என்ற பெயரில் பாசில் ரீமேக் செய்தார். இந்த படம் வெளியாகும் முன்பே மலையாளத்தில் நதியா பல படங்களில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : Filter போடல சரி, லிப்ஸ்டிக் போட்டிருக்கீங்களா – ரசிகரின் கேள்விக்கு விருமாண்டி பட நடிகை கொடுத்த பதில்

- Advertisement -

நடிகை நதியாவின் திரைப்பயணம்:

இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே நதியா ஆண்களின் மனதில் மட்டுமின்றி பெண்கள் மத்தியிலும் பிரபலமானார். மேலும், நதியாவின் கண்ணியமான தோற்றம், துடிப்பான நடிப்பு, நவநாகரிக உடைகள், ஹேர் ஸ்டைல் என அனைத்தும் பெண்கள் மத்தியில் பேசு பொருளானது. அதுமட்டும் இல்லாமல் 90 காலகட்டத்தில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லித் தான் பொருள் விற்பார்கள். அந்த அளவிற்கு நதியா மிக பிரபலமான நடிகையாக இருந்தவர்.

nadhiya

நடிகை நதியா நடிக்கும் படங்கள்:

பின் இவர் 1988 ஆம் ஆண்டு மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண்கள் உள்ளனர். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி என்ற திரைப்படத்தின் மூலம் நதியா மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

நடிகை நதியா குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி:

இந்நிலையில் நடிகை நதியா குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், நடிகை நதியாவுக்கு கருப்பு நடிகர்கள் என்றாலே பிடிக்காது. அப்படி என்றால் நீங்கள் ரஜினியுடன் எப்படி நதியா நடித்தார் என்று கேட்பீர்கள். ரஜினியின் ராஜாதி ராஜா படத்தில் நடிக்க நதியாவிற்கு விருப்பம் இல்லையாம். நதியாவை கட்டாயப்படுத்தி தான் அந்த படத்தில் நடிக்க வைத்தார்களாம். அதனை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்துடன் படத்தில் நடிக்க நதியாவிடம் பேசினார்கள்.

கமல் உடன் நடிக்க வாய்ப்பு வராத காரணம்:

ஆனால், நதியா முடியவே முடியாது என்று மறுத்து விட்டாராம். அதற்குப் பிறகுதான் கேரள நடிகை சோபனாவை நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நதியா, நடிகருடன் விஜயகாந்துடன் கட்டிப்பிடிக்கவோ, முத்தம் காட்சிகளில் நடிக்க ஒத்து கொள்ள மாட்டேன் என்ற பல நிபந்தனைகள் வைத்தாராம். அதனால் தான் நதியாவிற்கு கமலுடன் நடிக்கும் வாய்ப்பும் தள்ளிப்போனது என்று நதியா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால், நடிகை நதியா விஜயகாந்துடன் ‘பூமழை பொழியுது ‘ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement