தன்னையும் வைரமுத்துவையும் தவறாக பேசிய பயில்வான் – சாக்கடை என்று விமர்சித்த ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி.

0
208
bayilwan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு இருக்கிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏ ஆர் ரஹ்மான் அக்கா ரிஹானா குறித்தும் வைரமுத்து குறித்தும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இளையராஜா உடன் பிரச்சினை ஏற்பட்ட பின்னர் ஏ ஆர் ரகுமானுடன் பணியாற்ற துவங்கிய வைரமுத்து பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றாததற்கு காரணம் அவர் ஏ ஆர் ரகுமானின் அக்கா ரிஹானாவிடம் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதால் தான் என்று பயில்வான் ரங்கசாமி பேசியிருந்தார் இப்படி ஒரு நிலையில் இவரது அருவருக்கத்தக்க பேச்சு குறித்து ஏ ஆர் ரகுமான் சகோதரி ரிஹானா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர் ‘நான் ரகுமானிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். உனக்கு வைரமுத்து சார் வேண்டுமென்றால் அவரை சேர்த்துக் கொள் எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது என்று கூறி விட்டேன். ஆனால், அந்த விஷயத்தை அவர் முடிவு செய்தது இதில் நான் ஒன்றும் செய்ய முடியாது. வைரமுத்துக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்று சொல்ல நான் யாரோ. வைரமுத்து சார் பேசுகிறாரா இல்லை இவரே பேசுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை.

-விளம்பரம்-

அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கை தொடர இருக்கிறேன். வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசக்கூடாது. அவரிடம் இது குறித்து எனக்கு பேச எதுவும் கிடையாது. சாக்கடைகளிடம் எல்லாம் பேச முடியாது சாக்கடை என்று தெரிந்த பின்னர் அதில் நாம் கைவிடுவோமா ? தள்ளி நின்று தூரத்திலிருந்து நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டியது தான். பயில்வான் இப்படி பேசியது ஏ ஆர் ரகுமானுக்கு தெரியாது. அவரை பற்றி போட்ட வீடியோவையே நான் அவரிடம் காமிக்க மாட்டேன்.

அவர் என்னை ஏன் இப்படி பேசுகிறார், இதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதும் எனக்கு தெரியவில்லை. ரஹ்மான் குடும்பத்தை பற்றி பேசினால் நிறைய வியூஸ் கிடைக்கும் என்று இப்படி எல்லாம் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. நான் வைரமுத்துவை சந்திப்பது மிகவும் அரிது. அவர் பத்தடி தள்ளி நிற்பார் நான் ஹாய் என்று மட்டும் சொல்வேன். அப்படித்தான் நாங்கள் சந்தித்து இருக்கிறோம். அவர் என்னிடம் கிட்ட நின்று கூட பேசியது கிடையாது. என்னுடைய படத்திற்கு பாட்டு எழுதிய போது கூட ஃபோனில் தான் எழுதினார் நேரில் அவ்வளவாக அவரை சந்தித்ததே கிடையாது என்று பேசி இருக்கிறார்.

Advertisement