‘மாமா பயலே, போடா எச்சக்கல நாயே’ – மேடையில் நேருக்கு நேர் சண்டையிட்ட பயில்வான் மற்றும் ராஜன்.

0
456
rajan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு இருக்கிறார். மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக விட்டு வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

- Advertisement -

அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் கே ராஜன் புகார் அளித்திருந்தார்.

யூடியூப் சேனல்களில் பெண்களுக்கும் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் எதிராக ரகசியங்களை வெளியிடுகிறேன் என்று சொல்லி பொய்யான செய்திகளை பயில்வான் ரங்கநாதன் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியிருக்கிறார். இதனால் பல பெண்கள் திரைப்பட நடிகர், நடிகைகள் மிகவும் மன வேதனையும், மன உளைச்சலிலும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், பயில்வான் அதை கொண்டு கொள்ளாமல் தொடர்ந்து இந்த மாதிரி கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. என்னை யாராவது தாக்க வந்தால் அரிவாளால் அவர்களின் கழுத்தை அறுத்து விடுவேன். நான் தூத்துக்குடிக்காரன் என எல்லா பெண்களையும் அச்சுறுத்தி இருக்கிறார். அதனால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் அவர் மீது புகார் கொடுக்க பயப்படுகிறார்கள் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக பயில்வான் மற்றும் ராஜன் இருவரும் ஒரே மேடையில் சந்தித்து கொண்டனர்.

சமீபத்தில் கட்சிக்காரன் என்ற படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் ராஜன் கலந்துகொண்டு பேசி இருந்தார். ராஜன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அமர்ந்து கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதன் ராஜனிடம் சம்பந்தமில்லாமல் கேள்விகளை கேட்டார். இதற்கு ஆரம்பத்தில் பொறுமையாக ராஜன் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் என்னைப் பற்றி ஏன் மேடையில் பேசினீர்கள் என்று கேள்வி எழுப்பினார் பயில்வான். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட இருவருமே வாடா போடா என்று ஒருமையில் பேசி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக ராஜன் மாமா பயலே போடா எச்சக்கலை நாயே என்று பயில்வான் ரங்கநாதனை கடுமையாக திட்டி இருக்கிறார்.

Advertisement