கணவரை இழந்த மீனா மற்றும் மனைவியை பிரிந்த தனுஷ் குறித்து சர்ச்சையை கிளப்பிய பயில்வான்

0
738
bayilwan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு இருக்கிறார். மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக விட்டு வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

- Advertisement -

அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான். இந்த நிலையில் தான் நடிகை மீனா மற்றும் நடிகர் தனுஷ்ப்பற்றி பிரபல சினிமா விமார்சகரான பயில்வான் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை கூறியிருக்கிறார்.

பயில்வான் பேட்டி :

அதாவது நடிகை மீனா சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகளுக்கு மேலே ஆனதால் அவரை பாராட்டும் பொருட்டு தனியார் சேனல் சார்பாக விழா ஓன்று நடத்தப்பட்டது. இந்த விழாவினால் மீனாவிற்கு ரூபாய் 17 லட்சம் கிடைத்து என்றும் ரஜினிகாந்தை மீனாவே அந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் கூறினார் பயில்வான்.மேலும் நடிகை மீனாவும் ரஜினிகாந்தும் “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில் இருந்து நல்ல அப்பா மகள் உறவில் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தனுஷ் – மீனா திருமணம் :

ஆனால் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஆனால் இது உறுதியான தகவல் கிடையாது என்றும் குண்டை தூக்கி போட்டார். அதோடு நடிகர் தனுஷுக்கு 40 வயதிற்குள் தான் இருக்கிறது, இருவருக்குமே பாடி டிமாண்ட் இருக்கும் , அதேபோல மீனா கணவரை இழந்து இருக்கிறார், தனுஷ் மனைவியை பிரிந்து இருக்கிறார். எனவே இருவரும் திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை என்று கூறினார்.

தனுஷ் விஷியத்தை பொறுத்தவரையில் தனுஷ் சமீபத்தில் தான் 150 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை கட்டினார், ஆனால் அந்த வீட்டின் கிரகப்ரவேசத்திற்கு தன்னுடைய மகன்கள் வர ஐஸ்வர்யா அனுமதிக்கவில்லை என்றும் கூறினார் பயில்வான். மேலும் திருமணமாகி மகன்களுடன் பிரிந்து வாழ்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் குட்டை டவுசர் அணிந்து ஐஸ்வர்யா இருப்பதாகவும் பயில்வான் விமர்சித்தார்.

மேலும் ரஜினிகாந்த அவருடைய மகள் ஐஸ்வர்யாவை இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கம் கட்ட கூடாது என்று கண்டித்ததாகவும், ஆனால் தற்போது ஐஸ்வர்யா தேவாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், இதனால் மனமுடைந்த ரஜினி அந்த வேதனையை போக்குவதற்காக படங்களில் தொடர்ந்து நடித்து வருவதாகவும் தெரிவித்தார் பயில்வான் ரங்கநாதன்.

Advertisement