Home பிக் பாஸ்

விக்ரமன் தப்பு பண்ணாலும் கமல் கேட்க மாட்டார், அதுக்கு காரணம் இதான் – பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டால்க்.

0
514
bayilwan
-விளம்பரம்-

சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு இருக்கிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி புட்டு புட்டு பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் கமல் மற்றும் விக்ரமனுக்கும் இருக்கும் பிரச்சனை குறித்தும் பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் துவங்கி ஒரு மாதத்தை கடந்து இருக்கிறார். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.ஆனால், பிக் பாஸ் வரலாற்றில் முத்ல் முறையாக ஒரு அரசியல் பிரபலம் கலந்துகொண்டது இதுவே முதன்முறை. இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். விக்ரமன் பல அரசியல் பிரபலங்களை பேட்டி எடுத்து இருக்கிறார். அதில் பல பேட்டிகளில் பலரை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு இருக்கிறார். மேலும், அடிக்கடி கமலிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார். இப்படி ஒருநிலையில் விக்ரமனை பார்த்து கமல் பயப்படுகிறார் என்று பயில்வான் கூறுகிறார்.

விக்ரமன் ஒரு கட்சியை சார்ந்தவர், எனக்கு என்னமோ அவரை பார்த்து கமல் பயப்படுகிறார் என்று தான் தோன்றுகிறது. அனைவரையும் எதிர்த்து பேசும் கமல் விடுதலை சிறுத்தை பிரமுகர் விக்ரமனை பற்றி எதுவும் விமர்சிக்க மாட்டார். விக்ரமன் சில தவறுகளை செய்தால் கூட அதனை பெரிதாக சுட்டிக்காட்டாமல் சென்று விடுவார் கமல் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news