நடுரோட்டில் வெளுத்து வாங்கிய ரேகா நாயர் – சித்ராவின் காண்டம் மேட்டரை இழுத்து படு மோசமாக டேமேஜ் செய்த பயில்வான்.

0
882
bayilwan
- Advertisement -

ரேகா நாயர் விஷயத்தில் சித்ராவின் காண்டம் மேட்டரை இழுத்து படுமோசமாக பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். அகிரா புரோடக்சன் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் படத்தில் நடித்த நடிகைகளுக்கு வாயில் சனி என்பது போல அடுத்தடுத்த பிரச்சினைகளில் சிக்கி வருகின்றனர். ஏற்கனவே இரவின் நிழல் படத்தின் நாயகி பிரகிடா அவர்கள் சேரி மக்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று ஊடகம் ஒன்றில் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

- Advertisement -

இரவின் நிழல் பட நடிகைகள் சர்ச்சை:

இதற்கு பார்த்திபன் சார்பில் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனைக்கு முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த பிரச்சனை அடங்குவதற்குள் இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்த மற்றொரு நடிகையான ரேகா நாயரை திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் பேசியதற்கு சில தினங்களுக்கு முன்பு திருவான்மையூர் பீச்சில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனை, நான் நிர்வாணமாக நடித்தால் உனக்கு என்ன? நான் என்ன உன் பொண்டாட்டியா? என்று கண்ணா பின்னா பேசி இருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்- ரேகா நாயர் சண்டை:

அதோடு அவரை வாயில் வந்த வார்த்தைகளால் கேவலமாக திட்டி இருக்கிறார். இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதற்கு பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் சண்டைக்கு பிறகு பயில்வான் ரங்கநாதன், ரேகா நாயர் குறித்து பேசிய வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, ரேகா நாயர் என்னிடம் சண்டை போட்டது ஒரு செட்டப் செய்த நாடகம். இவர் என்னிடம் சண்டை போட்டதுமட்டுமில்லாமல் அவருடைய சட்டையை தூக்கி காட்டி மிகவும் மோசமாக நடந்து கொண்டார்.

-விளம்பரம்-

பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோ:

அதேபோல் ரேகா நாயர் மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் அறையில் காண்டம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதை ஏன் அவர் போலீசிடம் சொல்லவில்லை. நான் அவரிடம் அருவருப்பாக பேசவில்லை. நான் தவறாக பேசியிருந்தால் என்னை பற்றி போலீசில் புகார் கொடுத்திருப்பார். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தபோது அங்கிருந்து ரேகா சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நான் கமிஷனர் அலுவலகத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறேன். எனக்கு இருக்கும் ஆதரவை பார்த்து பொறாமையில் என்னிடம் இப்படி மோசமாக ரேகா நாயர் சண்டை போட்டிருக்கிறார். அதேபோல் ரேகா நாயர் எதற்கும் துணிந்தவள்.

ரேகா நாயர் குறித்து சொன்னது:

ஆண்கள் தான் பெண்களை கையை பிடித்து இழுப்பார்கள். ஆனால், ரேகா நாயர் என்னை கையை பிடித்து இழுத்து சண்டை போட்டார். நான் கோபப்பட்டு இருந்தால் என்னவாய் இருக்கும். இந்த சட்டம் பெண்களுக்கு தான் ஆதரவாக இருக்குமா? சினிமாவில் திறமையை மட்டும் காட்டி நடியுங்கள். அந்தரங்க உறுப்புகளையும், தசைகளையும் காட்டாதீர்கள். ரேகா நாயர் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படும் பனங்காட்டு நரி நான் இல்லை. தனக்கு வாய்ப்பு கொடுத்த பார்த்திபனை அவர் அவதூறாக விமர்சனம் செய்திருக்கிறார் என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Advertisement