TRPகாகத்தான் என்ன கூப்பிட்டாங்க, அங்க கூப்டு என் பொண்ண பத்தி பேசியது – ஷகீலாவிற்கு பதிலடி கொடுத்த பயில்வான்.

0
438
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

-விளம்பரம்-

இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பயில்வான் தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். அதிலும் சமீப காலமாக இவர் நடிகைகள் குறித்து ஆபாசமாக காலமாக வருகிறார். இதை சில பேர் கண்டு கொள்ளவில்லை என்றாலும் சில பேர் நேரடியாகவே சண்டை போட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை குயிலி தான் தொகுத்து வழங்கி வருகிறார். குயிலி மற்றும் பல்வேறு விவாத பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பி வருகிறார்கள்.

- Advertisement -

வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சி:

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ரங்கநாதன்- ஷகீலா இருவரும் நேருக்கு நேர் மோதி இருக்கிறார்கள். அதில் பயில்வான், நீங்க லிவிங் லைப் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வருகிறீர்களே? எப்போ திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு சகிலா, உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று கேட்டவுடன் இதற்கு முன்னாடி நீங்கள் என்ன மாதிரியான படத்தில் எல்லாம் நடித்தீர்கள் தெரியுமா? ஆனா, இப்ப என்ன பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கீங்க? என்று கேட்டிருக்கிறார். அதற்கு சகிலா, வயிற்று பிழைப்புக்காக நான் எதையோ காட்டி நடிக்கிறேன்.

-விளம்பரம்-

ரங்கநாதன்- ஷகீலா விவாதம்:

அதில் உனக்கு என்ன பிரச்சனை என்று கூறியிருந்தார். உடனே பயில்வான், நானும் வயிற்று பிழைப்புக்காக பேசுகிறேன் என்று கூற வயிற்று பிழைப்புக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று நடுவராக இருக்கும் குயில் கேட்டிருக்கிறார். பின் வயிற்று பிழைப்புக்காக எதை வேண்டுமானாலும் காட்டலாமா? என்று பயில்வான் ரங்கநாதன் கேட்டிருக்கிறார். பின் சகிலா, உங்களுடைய கடைசி பெண் யாரை காதலிக்கிறார் தெரியுமா? என்று கேட்டவுடன் பயில்வான், அப்பட்டமான பொய், வாய் அழுகிவிடும் என்றெல்லாம் சொல்கிறார். ஷகீலா, உண்மையானது தான். என்னிடம் ஆதாரம் இருக்கிறது. என்னுடைய நண்பர் ஒருவர் மூலம் தெரிந்தது.

பயில்வான் ரங்கநாதன் கொடுத்த விளக்கம்:

அவருடைய பெண் ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று சொன்னவுடன் ரங்கநாதனால் எதுவுமே பேச முடியவில்லை. இந்த விவகாரம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஆரம்பத்தில் குயிலி என்னிடம் சொன்ன மாதிரி தான் பேசிக்கொண்டிருந்தார். சகிலா தான் என்னிடம் தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டார். நான் பேசிய பல விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் எடிட் பண்ணி விட்டார்கள். நான் சகிலாவுக்கும் அவர் பொண்ணுக்கும் நடந்த சண்டை பற்றி எல்லாம் கேட்டேன்.

ஷகீலா குறித்து சொன்னது:

அதற்கு சகிலா என்னுடைய பெண்ணை பற்றி தவறாக பேசினார். நான் இப்போதும் என்னுடைய குடும்பத்தோடு சந்தோஷமாக தான் வாழ்கிறேன். என்னுடைய மனைவி, குழந்தைகள் என்று இருக்கிறேன். ஆனால், ஷகீலா எப்படி வாழ்கிறார்? அவங்க சரியாக இருந்தால் ஏன் அவர்களால் அப்படி வாழ முடியவில்லை? நிகழ்ச்சியில் என்னிடம் சர்ச்சையாக கேள்வி கேட்டபோதும் நான் அமைதியாக தான் இருந்தேன். நான் அந்த இடத்தில் மட்டும் இல்லை எப்போதுமே நான் யாரு கோவப்படுத்தினாலும் அமைதியாக தான் இருப்பேன். அந்த நிகழ்ச்சியில் இரண்டு பெண்களை பேச வைத்திருந்தார்கள். அந்தப் பெண்கள் பேசி முடித்து விட்டு என்னிடம் வந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் முடியாது என்று மறுத்து விட்டேன். நான் தப்பானவராக இருந்தால் ஏன் என்னிடம் வந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் சினிமாவில் இருக்கும் சாக்கடைகளை களைய வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement