பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்து ரவீந்தர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்றாவது வாரம் தொடங்கி 19 நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை பெற்று சாச்சனா வெளியேறி மீண்டும் உள்ளே வந்தார். பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் அர்னவ் வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் 8:
மூன்றாவது வாரம் 5 ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் டாஸ்க் சென்று கொண்டு இருக்கிறது. இதில் ஆண்கள் அணி கஸ்டமராகவும், பெண்கள் அணி நிர்வாகம் செய்து இருந்தார்கள். பின் ஆண்கள் அணி நிர்வாகமும், பெண்கள் அணி கஸ்டமராகவும் இருந்தார்கள். அதன் பின் இரண்டு அணியில் இருந்து டாஸ்க்கில் சிறப்பாகவும் மோசமாகவும் விளையாடிய போட்டியாளர்களை தேர்வு செய்து, இதில் சிறப்பாக விளையாடியவர்கள் ஒரு அணியும், மோசமாக விளையாடியவர்கள் ஒரு அணியும் விளையாடி இருந்தார்கள்.

ரவீந்தர் பேட்டி:
அதோடு நாமினேஷன் ப்ரீ பாஸ் டாஸ்கில் பெண்கள் அணி தான் வென்றார்கள். இப்படி நாளுக்கு நாள் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொடுக்க டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ரவீந்தர், நான் சீக்கிரமாகவே எலிமினேட் ஆனதற்கு அக்கறை, அன்பு தான் காரணம். தர்ஷா தமிழ்நாட்டுக்கு வந்த கதை உங்களுக்கு தெரியுமா? தர்ஷா தமிழ்நாட்டுக்கு பிளவுஸ் தைக்க தான் வந்தார். அவர் பெங்களூரில் ஆசிரியராக வேலை செய்திருந்தார். அதற்குப்பின் பாண்டி பஜாரில் ஜாக்கெட் தைக்க வந்தார்.
https://www.youtube.com/watch?v=PXUiNafIgas
தர்ஷா குறித்து சொன்னது:
சென்னை வந்த இடத்தில் ஒருத்தர், நீங்கள் சினிமாவுக்கு மாடலிங் போகலாம் என்று சொன்னதால் அப்படியே அவர் சினிமாவுக்குள் வந்தார். இப்படித்தான் அவர்களைப் பற்றி ஆரம்பத்தில் வெளிப்படையாக பேசிவிட்டு பின் கன்டென்ட் பண்ணனும்னு சொன்னபோது மேகி கன்டென்ட் பண்றாங்க. இரண்டு நிமிஷத்துக்கு மேல அவர்கள் கொடுக்கும் கன்டென்ட் நிற்கவே மாட்டேங்குது. நல்ல பாய்ண்ட் பேச வேண்டிய இடத்தில் பேச மாட்டுகிறார்கள். பேசவே கூடாது என்ற இடத்தில் பேசுகிறார்கள். பல நேரங்களில் அவர்களை வைத்து காமெடி நடந்து கொண்டிருக்கிறது.

போட்டியாளர்கள் குறித்து சொன்னது:
கேமரா இல்லை என்பது கூட தெரியாமல் தனியாக பர்பாம் செய்கிறார்கள். அவங்க போடுற பாதி சண்டை போலி தான். சௌந்தர்யா மாதிரி இல்லாமல் ஏதாவது பண்ணனும்னு தர்ஷா ட்ரை பண்ணிக் கொண்டிருக்கிறார். அதேபோல் இந்த சீசனில் அண்ணன்- தங்கச்சி, கேர்ள் பிரண்ட்- பாய் பிரண்டு என்று எந்த ரிலேஷன்ஷிப்புமே ஒர்க் அவுட் ஆகாது. உண்மையில் நான் இரண்டாவது வாரத்தில் ஒரு பிளே பண்ணலாம் என்று பேசி வைத்திருந்தேன். நான் எமதர்மன், சுனிதா சித்திரகுப்தன். அந்த மாதிரி கான்செப்டில் ஒரு ஜாலியான விளையாட்டு பண்ணலாம் என்று இருந்தோம். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக மக்கள் எதிர்ப்பார்ப்பதை கொடுப்பேன் என்று கூறி இருக்கிறார்.






