ஊருக்கு போக கூட காசு இல்லாம இருந்தப்போ ‘ பிக் பாஸ் பிரபலத்தை புகழ்ந்த தாமரை – கடுப்பாகி முகம் மாறிய பிரியங்கா.

0
645
thamarai
- Advertisement -

பிற போட்டியாளரை தாமரை புகழ்ந்து பேசி இருந்ததால் கடுப்பாகிய பிரியங்காவின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. விஜய் டிவியில் ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இந்த முறை பல மாற்றங்கள் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள்.

-விளம்பரம்-
Bigg Boss Tamil 5 Thamarai Selvi Stage Dance Video Goes Viral

மேலும், இந்த நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் 105 நாட்கள் ஓடி ஒளிபரப்பாகி இருந்தது. இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது இடத்தை பவானி ரெட்டி பிடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த 5வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமயமில்லாத பலர் பங்கேற்று இருந்தனர். அதில் ஒருவர் தான் தாமரை செல்வி. இவர் மேடை நாடக கலைஞர். மேடை நாடகங்களில் நடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து தன்னுடைய குடும்பத்தை பார்த்து வந்தவர் தாமரை.

இதையும் பாருங்க : உயரத்தின் காரணமாக Selfie எடுக்க சிரமப்பட்ட பெண் ஊழியர் – விக்கி நயன் செய்த செயலால் நெகிழிந்த ரசிகர்கள் – வீடியோ இதோ.

- Advertisement -

தாமரை பற்றிய தகவல்:

மேலும், முகம் தெரியாத நபராக நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தாமரை. ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து புயலாக மாறி டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று. தாமரை இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்றே சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தாமரைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதற்கு பின் தாமரை பிக் பாஸ் அல்டிமேட் பின் பங்கேற்று இருந்தார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி இருந்தார்கள். இதில் பாலாஜி, நிரூப், தாமரை, ரம்யா ஆகிய 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் பட்டத்தை வென்று இருந்தார். மேலும் இரண்டாம் இடத்தை நிரூப்பும் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை ரம்யா மற்றும் தாமரையும் பிடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

தாமரை செய்த செயல்:

தற்போது தாமரை விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார். இதில் இவர் தன் கணவருடன் சேர்ந்து நடனம் ஆடி வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் தாமரை செய்த செயலால் கடுப்பான பிரியங்காவின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், நிகழ்ச்சியில் தாமரைக்கு ஒரு போட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதில் தாமரை கண்ணாடி வெற்றி பெறுகிறார். இதை யாருக்கு கொடுப்பீர்கள்? என்று கேட்டவுடன் இதை நான் ஐக்கி தான் கொடுப்பேன் என்று தாமரை கூறிஇருக்கிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இப்போது வரை என்னுடன் அதிக நட்பாக இருப்பது ஐக்கி பெர்ரி மட்டும் தான். எனக்கு மேக்கப் சாமான் முதல் எனக்கு ஊருக்கு போவதற்கு பஸ்சுக்கு காசு முதல் எல்லாமே ஐக்கி கொடுத்திருக்கிறார்.

பிரியங்கா கடுப்பான காரணம்:

நிகழ்ச்சியில் பல பேர் என்னிடம் பழகி இருந்தாலும் நிகழ்ச்சிக்கு பின் என்றும் நட்பு மாறாமல் இருப்பது ஐக்கி தான் என்று கூறி தாமரை அந்த கண்ணாடியை ஐக்கிக்கு போட்டுவிட்டு கட்டியணைத்து சந்தோஷப்பட்டார். இதனால் பிரியங்கா கடுப்பாகி அவருடைய முகத்தில் சில மாற்றமும் பொறாமையும் தெரிந்தது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பிரியங்காவின் பெயர் சொல்லாததனால் தான் பிரியங்கா இப்படி ஆகிவிட்டார்? என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது தாமரையும் பிரியங்காவும் அவ்வளவு நெருக்கமாக அக்கா தங்கை உறவு போலவே இருந்தார்கள். ஆனால், நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இருவருமே எந்த ஒரு தொடர்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement