உயரத்தின் காரணமாக Selfie எடுக்க சிரமப்பட்ட பெண் ஊழியர் – விக்கி நயன் செய்த செயலால் நெகிழிந்த ரசிகர்கள் – வீடியோ இதோ.

0
880
nayan
- Advertisement -

செல்ஃபீ எடுக்க கஷ்டப்பட்ட ரசிகையை புரிந்துகொண்டு விக்கியும் நயனும் செய்துள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக சிம்பு மற்றும் பிரபுதேவாவை நயன் காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாராவிடம், அவர் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா, இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாக கூறியிருந்தார். தாங்கள் மிகவும் privateஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் பற்றி பெரிதாக வெளியில் சொல்லவில்லை.

இதையும் பாருங்க : ஷூட்டிங்கில் நேர்ந்த விபரதீதம், ஆற்றில் கழிந்த காரில் சிக்கிய சமந்தா – பதறிய படக்குழு. என்ன ஆச்சி செல்லத்துக்கு.

- Advertisement -

ரகசிய திருமணம் முடிந்ததா :

ஆனால், நிச்சம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகை நயன்தாரா. அதில் ஒரு புகைப்படத்தில் நடிகை நயன்தாராவின் நெற்றி வகிடில் குங்குமம் இருந்தது தான் தற்போது நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்கிற கேள்வி எழுந்தது.

விரைவில் நயன் – விக்கி திருமணம் :

இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஏற்கனவே ரகசிய திருமணத்தை முடித்துவிட்டதாக ஒரு புதிய கிசுகிசு கிளம்பி இருந்தது. ஆனால், அதுவும் வதந்தி என்று தான் பின்னர் தெரிந்தது. இருப்பினும் இவர்கள் திருமணம் வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருச்சி கோயிலுக்கு சென்று உள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தயங்கி நின்ற பெண் ஊழியர் :

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருச்சியில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருக்கின்றார்கள். அங்கு கோவிலில் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரையும் பத்திரிகையாளர் சூழ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அப்போது அங்கு இருந்த விமான நிலைய பணிப்பெண் ஒருவர் புகைப்படம் எடுக்க தயங்கியபடி நின்று கொண்டு இருந்தார்.

நெகிழ வைத்த விக்கி – நயன் :

அதை கவனித்த விக்னேஷ் சிவன், நயன்தாராவிடம் அந்த பெண்ணை காட்டினார். பின்னர் உயரம் குறைவான அந்த பெண் செல்ஃபீ எடுக்க சிரமப்பட்டார். இதை பார்த்த விக்னேஷ் சிவன், தானே அந்த போனை வாங்கி செல்பி எடுத்தார். மேலும், நயன்தாராவும் அந்த பெண்ணின் உயரத்திற்கு கீழே குனிந்து போஸ் கொடுத்துவிட்டு சிரித்த முகத்துடன் அந்த பெண்னிடம் இருந்து விடைபெற்றார்.

Advertisement