முகமூடி படத்தப்ப எப்படி வந்தார், இப்போ என்னடான்னா – பூஜா ஹேக்டே பந்தாவால் புலம்பிய இயக்குனர்.

0
5011
pooja
- Advertisement -

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.

-விளம்பரம்-
Mugamoodi Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of  Mugamoodi Movie - FilmiBeat

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து வருண் தேஜின் ‘முகுந்தா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே.

- Advertisement -

தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்கு தன்னுடன் அசிஸ்டன்டாக மட்டும் 12 பேரை அழைத்து வருகிறாராம். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர் கே செல்வமணி பேசுகையில், பெரிய நடிகர்கள் படம் என்றால் படத்தின் பட்ஜெட்டில் 55% சம்பளம் ஆகவே கொடுக்கப்படுகிறது. 16 மணி நேரம் வேலை பார்க்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஒரு சதவீதம் மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது என்று கூறியிருந்தார். மேலும், இதற்கு ஒரு உதாரணத்தை கூறிய செல்வமணி முகமூடி படத்தில் நடித்தபோது பூஜா ஹெக்டே 2 பேருடன் மட்டும்தான் படப்பிடிப்புக்கு வந்தார். ஆனால், தற்போது 12 பேருடன் படப்பிடிப்புக்கு வந்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவை இழுத்து விடுகிறார் என்று ஆதங்கப்பட்டு உள்ளார்.

தென்னிந்திய மொழிகளில், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது.எனவே சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம் பூஜா ஹெக்டே. இது நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாவுடன் நடித்தபோது ரூ.2 கோடி சம்பளம் வாங்கினாராம். ஆனால், இவர் முகமூடி படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ? வெறும் 30 லட்சம் தான்.

-விளம்பரம்-
Advertisement