பல ஆண்டுக்கு முன் சச்சினுடன் எடுத்த போட்டோவை எடுத்தது அவர் தான் – யார்னு பார்த்தா ஷாக்காகிடுவீங்க. வீடியோ இதோ.

0
2761
nelson
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் நெல்சன், இந்தியா கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார் நெல்சன். தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். ஆனால், அதற்கு முன்பாவே இவர் சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் பாதியிலேயே கைவிடபட்டு இருந்தது.

-விளம்பரம்-

கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கி இருந்தார். சமீபத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இவர் விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியின் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தோனி சென்னை வந்தடைந்தார்.

இதையும் பாருங்க : புனீத்தின் மறைவு செய்தியை நேரலையில் வாசித்த போதே கதறி அழுத்த செய்து வாசிப்பாளர் – உருக்கமான வீடியோ.

- Advertisement -

அப்போது அவர் விஜய் மற்றும் நெல்சன் திலீப்குமார் உடன் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. படத்தின் படப்பிடிப்புகள் கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. . இந்த ஸ்டூடியோ வளாகத்தினுள் அமைந்துள்ள மற்றொரு அரங்கில் தான் கேப்டன் தோனி நடிக்கும் விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுது. அப்போது தான் பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று விஜய் மற்றும் நெல்சனை சந்தித்தார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.

Nelson Dilipkumar's best friend angry with him because of Vijay-Dhoni  meeting - Tamil News - IndiaGlitz.com

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்சன் திலீப் குமார், சச்சின் டெண்டுல்கர் உடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலானது. இப்படி ஒரு நிலையை இந்த புகைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நெல்சன் , இலங்கையில் இந்திய அணி கிரிக்கெட் விளையாட வந்த போது சச்சினை எதார்த்தமாக ஹோட்டலில் சந்தித்ததாகவும் அப்போது தான் இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இந்த புகைப்படத்தை எடுத்து தல தோனி தான் என்றும் கூறி இருக்கிறார் நெல்சன்.

-விளம்பரம்-
Advertisement