புனீத்தின் மறைவு செய்தியை நேரலையில் வாசித்த போதே கதறி அழுத செய்து வாசிப்பாளர் – உருக்கமான வீடியோ.

0
33241
puneeth
- Advertisement -

புனீத் குமாரின் செய்தியை வாசிக்கும் போது செய்தி வாசிப்பாளர் கண்கலங்கி அழுத காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் பவர்ஸ்டாராக கொடி கட்டி பறந்தவர் புனீத் ராஜ்குமார். கன்னட மொழியில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. மேலும், நேற்று புனீத் அவர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டு இருந்தார்.

-விளம்பரம்-

தீவிர சிகிக்சை அளித்து வந்த நிலையில் புனீத் அவர்கள் திடீரென்று உயிர் இழந்தார். இவருடைய இறப்பு செய்தி கன்னட திரை உலகில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவரின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெங்களூரில் உள்ள மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் கூடியதால் கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : 28 ஆண்டுக்கு முன் நடந்த உண்மைக் கதை – நெஞ்சை பதற வைக்கும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் கொடூரமான உண்மை பின்னணி.

- Advertisement -

இதனிடையே இவர் நடிகராக மட்டுமல்லாமல் இவர் 15 பள்ளிகளை நடத்தி அதில் அனைவருக்கும் இலவச கல்வியை கொடுத்திருக்கிறார். அதேபோல 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலை போன்றவை தன்னுடைய சொந்தப் பணத்திலேயே மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல்இவர் 1800 மாணவர்கள் படிப்பதற்காக கல்வி வழிவகை செய்துள்ளார். இப்படி இலவச பள்ளிகள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என கர்நாடக மக்களுக்காக இவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இறந்த பின்னர் கூட இவர் தனது கண்களை தானமாக கொடுத்து உள்ளார். மேலும், கர்நாடக மாநிலத்தில் ஒளிபரப்பாகும் Btv என்ற செய்தி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் புனித் ராஜ்குமாரின் செய்தியை வாசித்தார்.

அப்போது அவரை அறியாமலேயே செய்தி வாசிக்கும் போது அழுதார். பின் அழுதபடியே செய்தி வாசித்து இருக்கிறார். பின் இவர் அழுவதைப் பார்த்த சக ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு தான் மீண்டும் இவர் வழக்கம் போல் செய்தியை வாசிக்க ஆரம்பித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த அளவிற்கு நடிகர் புனித் ராஜ்குமார் மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வுலகில் இல்லை என்றாலும் என்றென்றும் மக்கள் மனதை விட்டு நீங்க மாட்டார் என்பதற்கு இது ஒன்றே உதாரணம்.

-விளம்பரம்-
Advertisement