தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் சென்ற குறித்து விஜய்யிடமே கேட்டு இருக்கிறார் இயக்குனர் நெல்சன். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.
இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.
இதையும் பாருங்க : இலவசமாக பீஸ்ட் ட்ரைலர், தியேட்டரை சேதப்படுத்திய விஜய் ரசிகர்களுக்கு தர்ம அடி கொடுத்த ஊழியர்கள். வைரல் வீடியோ இதோ.
மிரள வைத்த பீஸ்ட் ட்ரைலர் :
மேலும், இந்த பாடல் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது.மேலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இருந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. வழக்கம் போல இந்த ட்ரைலரும் யூடுயூபில் பல விதமான சாதனைகளை செய்து வருகிறது. அதோடு தளபதி விஜயின் பீஸ்ட் படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
நிராகரிக்கப்பட்ட இசை வெளியீட்டு விழா :
பொதுவாக விஜய் படங்கள் என்றாலே ரிலீசுக்கு முன்னர் இசை வெளியிட்டு விழா ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்க்கப்படும். அதுவும் இசை வெளியிட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்கவே அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டு இருப்பார்கள். இறுதியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசியது மட்டுமல்லாமல் மேடையில் நடனமாடி இருந்தார். இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழாவை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுஇருந்தனர்.
10 ஆண்டுகள் கழித்து டிவி நிகழ்ச்சியில் விஜய் ;
இந்த முலையில் பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்று அறிவிப்பு வெளியானது. இருப்பினும் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கலந்து கொள்ள இருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து டிவி நிகழ்க்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் விஜய் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதற்காக ப்ரோமோ நேற்று வெளியாகி இருந்தது.
சைக்கிளில் என்றது குறித்து கேட்ட நெல்சன் :
இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி உள்ள புரோமோவில், நடிகர் விஜய்யிடம், அதான் 4 கார் இருக்குல்ல, சைக்கிள ஏன் எடுத்துட்டு போனீங்க என நெல்சன் கேட்க அதற்கு நடிகர் விஜய் சிரித்தபடி ‘கொஞ்சம் சைலண்டா இருக்கீங்களா’ என்று பதில் சொல்லும்படியான காட்சிகள் இடம்பெற்று இருந்தன. கடந்தாண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தன் வீட்டிற்கு அருகில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடியில் வாக்களிக்க நடிகர் விஜய் சைக்கிளில்சென்று இருந்தார். அதனை குறிப்பிட்டு தான் இயக்குனர் நெல்சன் விஜய்யிடன் அந்த கேள்வியை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.