இந்தியாவில் முதன் முறையாக PLF முறையில் வெளியாக இருக்கும் ‘Beast’ ட்ரைலர் – மொதல்ல அப்படினா என்னனு தெரிஞ்சிக்கோங்க விஜய் ரசிகர்களே. (அஜித் Fans கேட்டா Use ஆகும்)

0
518
beast
- Advertisement -

விஜய்யின் பீஸ்ட் படத்தின் டிரைலர் பிரிமியம் லார்ஜ் பார்மட்டில் வெளியாக இருக்கிறது என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் இந்த படத்தில் இருந்து அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது. மேலும், விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் படம் உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை பிரீமியம் லார்ஜ் பார்மட்டில் வெளியீடுவதாக கூறப்படுகிறது. பிரீமியம் லார்ஜ் பார்மட் என்பது தற்போது சினிமா உலகில் வளர்ந்து வரும் ஒரு டெக்னாலஜி. 2016ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட பிரீமியம் லார்ஜ் ஃபார்மேட் கொண்ட திரைகள் இருந்து வருகின்றன. இதை vue மற்றும் odeon போன்றவர்கள் தான் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

HDR டால்பியில் செய்யப்பட்ட மாற்றம்:

இதன் மூலம் சந்தையில் உள்ள ஐமேக்ஸ்க்கு அதிக பணம் செலுத்துவதை தவிர்க்கலாம். PLF தொழில்நுட்பமானது வசதியான இருக்கை, பெரியதிரை ஆகியவற்றுடன் சிறந்த தரமான படத்தை ஒளிபரப்ப இருக்கிறது. சமீபத்தில் தான் இதை உயர் டைனமிக் ரேஞ்ச்(HDR) மற்றும் அதிவேக ஒலி அமைப்புகளையும் கொண்டதாக மாற்றப்பட்டது. இந்த கான்செப்ட் டால்பி அட்மோஸ் அடிப்படையிலான ஆடியோ சிஸ்டம் மற்றும் எக்லேர்கலர் hdr தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் இதற்கு பெரிய அளவிலான திரை தேவையில்லை.

-விளம்பரம்-

HDR டால்பி பற்றிய தகவல்:

தற்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது HDR டால்பி சினிமா தான். இது அட்மோஸ் மற்றும் கிறிஸ்டி லேசர் ப்ரொஜெக்டர்களை உள்ளடக்கிய PLF தொகுப்பின் ஒரு பகுதியாக விற்கப்படுகிறது. மேலும், ஒரு திரைக்கு சுமார் $562000 செலவாகும் என்று கூறப்படுகிறது. மாறாக eclair color ஆனது ஒரு சிறிய அறைக்கு $56000, பெரிய திரைக்கு $90000 செலவாகிறது. தற்போது பாரிஸில் உள்ள eclair மற்றும் eclair hdr மாஸ்டரிங் செய்ய வசதியாக உள்ளது. இது ஒரு படத்திற்கு $22400 கூடுதலாக செலவாகிறது. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் துனிசியாவில் 50க்கும் மேற்பட்ட திரைகளில் இந்த மாதிரி டெக்னாலஜி பயன்படுகிறது.

விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகும் டெக்னாலஜி:

இந்த நிலையில் தற்போது விஜய்யின் பீஸ்ட் டிரைலரும் இந்த டெக்னாலஜியில் தான் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாம் மொபைல்களில் ஒரு வீடியோவை பார்க்கும் போது நமது விருப்பத்திற்கு ஏற்ப நமது screen வீடியோவை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இந்த டெக்னாலஜியில் தானாகவே screen சைசிற்கு மாறிவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் இதில் பீஸ்ட் ட்ரைலரை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

Advertisement