‘ஆச்சரியம் ஆனால் உண்மை ‘தடுப்பூசியால் மாற்றுத் திறனாளிக்கு ஏற்பட்ட அற்புதம். அப்படி என்ன நடந்துள்ளது பாருங்க.

0
292
covishield
- Advertisement -

சில வருடங்களாகவே கொரோனாவின் ருத்ரதாண்டவம் ஒட்டுமொத்த உலக உலகையும் உலுக்கி கொண்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பேர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த கொரோனாவால் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மக்களும் அரசாங்கமும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மேலும், இரண்டாவது அலை முடிந்தும் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் நிலையில் சில மாதங்களாகவே கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் கொரோனாவின் உருமாற்றமான ஓமைக்காரன் இந்தியா முழுவதும் பரவி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது. மேலும், கொரோனா தாக்கத்தைக் குறைப்பதற்காக கடந்த ஒரு வருடமாக கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் பலரும் 2 தடுப்பூசிகளை போட்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கோவிட் தடுப்பூசிகளை போட பலரும் பயந்தார்கள். இதற்கு சுகாதார துறை அமைச்சகம் பல விழிப்புணர்வு நடத்தி இருந்தார்கள். இதனால் கிராமப்புறங்களில் பயந்து இருந்த பலரும் தடுப்பூசி போட ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

கொரோனா கட்டுப்பாடு:

அதுமட்டுமில்லாமல் முக கவசம் அணிவது ,சமூக இடைவெளி என்று பல விதிமுறைகளை மக்களும் கடைபிடித்து வருகிறார்கள். மூன்றாவது அலையின் தாக்கம் அதிகமாக கூடாது என்பதற்காக இரவு நேரங்களில் ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் என்று சில மாவட்டங்களில் அரசாங்கம் அறிவித்து இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் கவனமாகவும் பாதுகாக்கவும் இருக்க வேண்டுமென சோசியல் மீடியாவில் பல சமூக விழிப்புணர்வு வீடியோக்களும் வந்து கொண்டிருக்கின்றது.

ஜார்க்கண்டில் நடந்த அற்புதம்:

மேலும், கோவிட் தடுப்பூசியால் பல பேருடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறது. அந்த வகையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பேசாத நபர் ஒருவர் பேசுகிறார் என்ற அற்புத, அதிசய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜார்க்கண்டின் பொக்காரோ நகரில் சால்காடி கிராமத்தில் வசித்து வருபவர் துலார்சந்த் முண்டா. இவருக்கு 55 வயது ஆகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் இவரால் நடக்க முடியாமல், பேச முடியாமல் போனது.

-விளம்பரம்-

துலார்சந்த் ஏற்பட்ட நிகழ்வு:

இதுவரை இவருக்காக 4 லட்சம் வரை செலவழித்து இருக்கிறார்கள். ஆனால், எந்த ஒரு பயனும் இல்லை. இந்நிலையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பின்னர் துலார்சந்த் எழுந்து நிற்கிறார், நடந்து செல்கிறார். தன்னுடைய குரலில் பேசுகிறார். இந்த அதிசய நிகழ்வு கண்டு பலரும் வியந்து போனார்கள். அதுமட்டுமில்லாமல் சுகாதார அதிகாரிகள் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போயிருக்கிறார்கள். இதுபற்றி மருத்துவர் ஜிதேந்திரா குமார் கூறியிருப்பது,

மருத்துவர் ஜிதேந்திரா குமார் கூறியது:

துலார்சந்த் நடப்பது, பேசுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மருத்துவ குழு ஒன்றை அமைத்து அவரது மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும். விபத்தில் சிக்கி சில நாட்களில் பழைய நிலைக்கு மீண்டு வருவது தெரியும். ஆனால், நான்கு ஆண்டு காலத்திற்கு பிறகு தடுப்பூசியால் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார் என்பது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement