இவரோட டைரக்சன்ல அக்காவை நடிக்க வைக்க வேணாம்- இப்படி சொன்ன ஊர்வசியையே படத்தில் அறிமுகம் செய்த பாக்யராஜ்.

0
3090
Munthanai-Mudichu
- Advertisement -

‘முந்தானை முடிச்சு’ படத்தை மறக்க முடியாது. அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ”என் கலையுலக வாரிசு பாக்யராஜ்” என்று அறிவிக்க வைத்த படம் அது. இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் மெகா ஹிட்டானது. ‘முந்தானை முடிச்சு’ உருவானபோது, கலாரஞ்சனிக்கு ‘டெஸ்ட் ஷ¨ட்’ நடந்தது. அவருடன் வந்த மாணவி, பாக்யராஜ் கேட்ட கேள்விகளுக்கு கலாரஞ்சனி பதில் சொல்வதற்கு முன்பே பதிலளித்தார். எரிச்சலடைந்த பாக்யராஜ், ”யார் இது முந்திரிக்கொட்டை மாதிரி…” என்று கத்தினார். வீட்டுக்கு வந்த மாணவி, ”சரியான சிடுமூஞ்சி டைரக்டரா இருக்காரு. இவரோட டைரக்சன்ல அக்காவை நடிக்க வைக்க வேணாம்” என்றார்.

-விளம்பரம்-
Image result for urvashi sister kalaranjini

- Advertisement -

தங்கையின் பேச்சைக் கேட்டு மிரண்ட கலாரஞ்சனி, ”அவரு பெரிய டைரக்டரு. இப்படி நீ பேசக்கூடாது” என்று கண்டித்தார். ஆனால், ‘முந்தானை முடிச்சு’ படப்பிடிப்பு தொடங்கும்போது, திடீரென்று கலாரஞ்சனியை நிராகரித்த பாக்யராஜ். வேறொரு ஹீரோயினை தேடியபோது, டெஸ்ட் ஷூட்டில் முந்திரிக்கொட்டை மாதிரி தொணதொணவென்று பேசிக் கொண்டிருந்த மாணவி ஞாபகத்துக்கு வரவே, ”அந்த பொண்ணை கூட்டிகிட்டு வாங்கய்யா” என்றார். உதவி இயக்குனர்கள் ஆளுக்கொரு பக்கம் பறந்து, அந்த மாணவியை அழைத்து வந்தனர். தன்னை திட்டிய இயக்குனருக்கு எதிரில் நின்ற மாணவி, ”இப்ப எதுக்கு என்னை வர சொன்னீங்க?” என்று துடுக்குத்தனமாக கேட்டார். அதைப் பெரிதும் ரசித்த பாக்யராஜ், ”நீதான் என் படத்துக்கு கதாநாயகி. ரெடியா இரு” என்றார். இப்படித்தான் ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் ஊர்வசி ஹீரோயினாக அறிமுகமானார். ”அப்ப எனக்கு எந்த விவரமும் தெரியாது. டி.வியில் ‘ஒளியும் ஒலியும்’ பார்த்து முடிச்சதும் தூங்கிடுவேன்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்தபடி சன் பாத். சலிக்காத ஷாலு ஷம்முவின் அட்ராசிட்டி.

-விளம்பரம்-

அப்படிப்பட்ட நான், ஷூட்டிங் ஸ்பாட்டுல பாக்யராஜ் சாருக்கு கொடுத்த தொல்லை ஏராளம். அதையெல்லாம் பொறுத்துக்கிட்டு, எப்படியோ என்னை ஒரு முன்னணி கதாநாயகியா மாத்திட்டாரு. அதுதான் எங்க டைரக்டரோட பெருந்தன்மை. ஒருநாள் நைட் ஷூட்டிங். பாக்யராஜ் சார், நான், கைக்குழந்தை நடிச்ச ”சின்னஞ்சிறு கிளியே… சித்திரப் பூவிழியே” பாட்டை படமாக்கிட்டு இருந்தாங்க. எனக்குத்தான் ராத்திரி ஏழு மணி ஆனவுடனே தூக்கம் வந்துடுமே. அப்படியே தூங்கித் தூங்கி வழிஞ்சேன். அதனாலயே அந்த பாட்டை ஷூட் பண்ண அதிக நாளாச்சி. என்னால் நடிக்க முடியலன்னு, ‘ஓ’ன்னு அழுவேன். இதையெல்லாம் பல்லை கடிச்சிக்கிட்டு, எங்க வாத்தியார் ஷூட் பண்ணார். அவர் இல்லன்னா, இந்த ஊர்வசி இல்ல. இன்னைக்கி நடிப்புல கமல் சார் கூட என்னை கம்பேர் பண்றாங்கன்னா, அது பாக்யராஜ் சார் போட்ட பிச்சை.

urvashi sister kalaranjini

அவரை என்னைக்குமே நான் மறக்க மாட்டேன்” என்றார் ஊர்வசி. கல்பனா, கலாரஞ்சனி, ஊர்வசி சகோதரிகள் பல மொழிப் படங்களில் நடித்துள்ளனர். கே.பாக்யராஜின் ‘சின்ன வீடு’ படத்தில் கல்பனா ஹீரோயினாக நடித்தார். பொதுவாக இந்த சகோதரிகள் மலையாளத்தில் மட்டுமே அதிக படங்களில் நடித்துள்ளனர் அதுபோல், மூவருமே தாங்கள் காதலித்து மணந்தவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து செய்துவிட்டனர். ஊர்வசி தனது நீண்ட நாள் நண்பர் சிவபிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக அறிவித்தார். இவர்களுக்கு மகன் இருக்கிறான்.

நன்றி : நடிகர் கயல் தேவ்ராஜ்

Advertisement