300, 400 ரூபாயாவது அனுப்பி விடுங்க. வறுமையில் வாடும் பிரபல நடிகர். வேதனையுடன் வெளியிட்ட வீடியோ.

0
2747
actr
- Advertisement -

சில மாதங்களாகவே ஒட்டு மொத்த உலகையும் உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ் தான். கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சினிமா முதல் சின்னத்திரை வரை என அனைத்து துறையும் முடங்கி உள்ளது.

-விளம்பரம்-

இதனால் பல சினிமா தொழிலாளர்கள், நடிகர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ராஜேஷ் கரீர். இவர் தற்போது வறுமையில் வாடுவதால் யாராவது உதவுங்கள் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹிந்தியில் இவர் மங்கள் பாண்டே, அக்னிபத் போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார்.

- Advertisement -

பின் இவர் சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும், நாடு முழுவதும் லாக் டவுன் போடப்பட்டு உள்ளதால் இவர் மிகவும் வறுமையில் வாடி வருகிறார். இதனால் இவர் உதவி கேட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, நான் இப்படி கேட்பதற்கு அசிங்கப்படவில்லை. ஏன்னா, எனது வாழ்க்கை அந்த அளவிற்கு கஷ்டமாக இருக்கு. எனது நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. எனக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது.

Rajesh Dharas ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಮೇ 30, 2020

உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்கிறேன் 300, 400 ரூபாயாவது உங்களால் முடிந்தால் அனுப்பிவிடுங்கள். எப்பொழுது ஷுட்டிங் ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை. அப்படியே ஆரம்பித்தால் எனக்கு வேலை கிடைக்குமா என்று கூட தெரியவில்லை. நான் வாழ்வதே அரிதான ஒன்றாக உள்ளது. சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கு. யாராவது நான் வாழ உதவி செய்யுங்கள். ப்ளீஸ் ப்ளீஸ் உதவி செய்யுங்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை பார்த்து பலரும் அவருக்கு உதவி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement