விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருந்தது.
இந்த சீசனில் அஸ்வின், பவித்ரா, கனி என்று ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அந்த வகையில் இந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்தவர் சின்னத்திரை நடிகை ரித்திகா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடரில் நடித்து வருகிறார்.
ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் முரட்டு சிங்கிள் என்று சுற்றிக்கொண்டு இருந்த பாலாவே இவர் பின்னால் சுற்ற ஆரம்பித்து விட்டார். புகழ் – பவித்ராவை எப்படி முடிச்சிப்போட்டு பேசினார்களோ அதே போல பாலா – ரித்திகாவையும் முடிச்சு போட்டு பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் உரையாடினார் ரித்திகாவிடம் ரசிகர் ஒருவர், நீங்களும் பாலாவும் காதலிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த ரித்திகா, “எதை வச்சு நீங்க இப்படி கேக்குறீங்கன்னு தெரில. திரையில் வரும் ஒவ்வொரு விஷயமும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகத் தான். ஒவ்வொரு நடிகருக்கும் இதுவே நோக்கம். வேறு எந்த நோக்கமும் இல்லை, நீங்கள் அதை ரசிக்கணும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. பாலா எனக்கு நல்ல நண்பர்” எனத்கூறிவிட்டார்.