மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் போண்டா மணிக்கு உதவி செய்யுமாறு காமெடி நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். சொந்த ஊர் இலங்கையில் உள்ள மன்னார் பகுதி. இவருடைய உண்மையான பெயர் கேதீஸ்வரன். உள்ளார். அங்கு இவர் மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற ஒன்றை தன்னுடைய நண்பர்களுடன் நடத்தி வருகிறார்.

இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா போன்ற பல படங்களில் இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் கவனிக்கப்பட்டது. மேலும், 2019ஆம் ஆண்டு வெளியான தனிமை படத்திலும் இவர் நடித்து இருந்தார்.
போண்டா மணி குடும்பம்:
மேலும், வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல காமெடி சம்பவங்களுடன் இவர் சேர்ந்து நடித்திருக்கிறார். தற்போது இவர் தனுஷ், விஜய் சேதுபதி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதுவரை வரை 270 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் கன்னட பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் மாதவி. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

விஷவாயு தாக்குதல் :
கடந்த மே மாதம் இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். பின்னர்நடிகர் போண்டா மணி இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு உதவி செய்யுமாறு நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரண்டு கிட்னி செயலிழப்பு :
அதில் பேசிய அவர் 'அண்ணன் போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். எனக்கு போன் செய்து அன்னே இரண்டு கிட்னியும் போயிடுச்சி என்ன காப்பாத்துனேனு அழுதார். எனக்கு என்ன பண்றதுனே தெரியல. யார் கிட்ட உதவி கேட்கறது என்று புரியவில்லை. உயிருக்குப் போராடும் அவருக்கு இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் அவரது மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
https://www.youtube.com/watch?v=UC02E3w6oDg
பெஞ்சமின் வேண்டுகோள் :
நாடுவிட்டு நாடு வந்து, இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி, திருமணம் செய்தி இரு குழந்தைகளைப் பெற்று தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவருக்கு காப்பாற்ற வேண்டும். உங்களால் முடிந்தால் அரசியல் தலைவர்களிடமோ, நண்பர்களிடமோ சொல்லி அண்ணன் போண்டா மணியை காப்பாற்ற வேண்டும். இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர். அனாதையாகவே போகக் கூடாது. தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஷ்'என அந்த வீடியோவில் பெஞ்சமின் கேட்டுக் கொண்டுள்ளார்.





