என் இனிய நண்பன் போண்டா மணி இறந்துட்டன் – கதறி அழுதபடி வீடியோ வெளியிட்ட நடிகர் பெஞ்சமின்

0
304
- Advertisement -

போண்டா மணியின் இறப்பு குறித்து காமெடி நடிகர் பெஞ்சமின் வெளியிட்டுள்ள வீடியோ பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. த்மிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய உண்மையான பெயர் கேதீஸ்வரன். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து விவேக், வடிவேலு, சந்தானம் என்று பலர் காமெடி நடிகர்களுடன் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போண்டா மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் போண்டா மணி பாதிக்கப்பட்டுஇருந்தார். பின்னர் நடிகர் போண்டா மணிசென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஇருந்தார்.

- Advertisement -

மேலும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தனது உடல் நிலை குறித்து பேசிய போண்டா மணி ‘ஆறு மாதமாகவே என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. பருவ காதல் என்ற ஒரு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் சாக்கடையில் விழுகிற மாதிரி சீன் இருக்கும். அதை தத்துரூபமாக எடுக்க வேண்டும் என்று நிஜ சாக்கடையில் என்னை விழ வைத்தார்கள். அந்த சாக்கடை தண்ணீர் உடம்புக்குள் போனதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது.

ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையும் பண்ணினார்கள். இருந்தும் தொடர்ந்து மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு இருந்தேன்.அப்போது தான் என்னுடைய இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த விஷயம் தெரிந்தது. என்னுடைய வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு துயரம் ஏற்பட்டது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறி இருந்தார். அப்போது வடிவேலு உங்களை தொடர்பு கொண்டாரா என்று கேட்டதற்கு இல்லை என்று வேதனையுடன் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

தனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து நலமுடன் வீடு திரும்பினார். இப்படி ஒரு நிலையில் நேற்று வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  தற்போது போண்டா மணியின் இறப்பு செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

போண்டா மணியின் இறப்பிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் காமெடி நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். என் இனிய நண்பன் போண்டா மணி அகலா மரணம் அடைந்துவிட்டான். அவனுக்கு உதவி புரிந்த மக்கள் மற்றும் நடிங்கர்களுக்கும் நன்றி’ என்று கண்ணீருடன் பேசி இருக்கிறார்.

Advertisement