சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற நிலையில் கடந்த ஆண்டு 8வது சீசன் நிறைவடைந்தது.
சூப்பர் சிங்கர் 8 :
இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முத்து சிற்பி, பரத், ஆனந்த் அபிலாஷ், மான்ஸி, ஸ்ரீதர் சேனா ஆகிய 6 பேர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தார்கள். இதில் ஸ்ரீதர் சேனா முதல் இடத்தை பிடித்தார். பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து யாராவது திறமையான பாடகர்கள் வெளியேறினால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான்.
சர்ச்சையில் சிக்கிய நடுவர்கள் :
அதேபோல இதுவரை நடந்து முடிந்த பல்வேறு சூப்பர் சிங்கர் சீசன்களின் டைட்டில்களை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து தான் வருகிறது. அந்த வகையில் ஸ்ரீதர் சேனா வெளியேற்றப்பட்ட போது பேசும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக பலரும் நடுவர்களைக் கடுமையாகச் சாடி பதிவிட்டு வந்து. இந்த சீசனில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், எஸ்.பி.பி.சரண், பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
பென்னி தயாள் வேதனை பதிவு :
இதில் பின்னணி பாடகரான பென்னி தயாள், சூப்பர் சிங்கரின் ஒரு சில சீசன்களின் நடுவராக இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் சமூக வளைத்ததில் வரும் வசைபாடுகளை தாங்கிகொள்ள முடியாமல் பென்னி தயாள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் ‘”இனி நான் சூப்பர் சிங்கர் 8 தொடர்பாக எதையும் பதிவிட மாட்டேன். என்னால் அத்தனை வெறுப்பைக் கக்கும் செய்திகளைத் தாங்க முடியவில்லை.
மீண்டும் வந்த பென்னி தயாள் :
நீங்கள் இதுவரை காட்டிய அத்தனை அன்புக்கும் நன்றி. நானும் ஒரு மனிதன் தான். போதும். நன்றி. நிகழ்ச்சியின் அடுத்த சீஸனில் உங்களைப் பார்க்க மாட்டேன்” என்று கூறி இருந்தார். இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்த அரபிக் குத்து பாடலுக்கு, பிரியங்கா, மாகாபா மற்றும் பென்னி தயாள் மூவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து டிக் டாக் செய்து வீடியோ ஒன்று வெளியானது. இப்படி ஒரு நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8ன் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் நடுவர்களாக பென்னி தயாளும் இருக்கிறார். இதன் மூலம் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்துவிட்டார் என்றே தெரிகிறது.