ராணுவத்தை மையப்படுத்தி வெளிவந்த படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்கிற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை.
அமரன் படம்:
தீபாவளிக்கு வெளியான இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அதோடு முதல்வர் ஸ்டாலினும் படத்தை பார்த்து படகுழுவினரை பாராட்டி இருந்தார். பிரபலங்கள் பலரும் அமரன் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். அதோடு மிகப்பெரிய அளவில் அமரன் படம் வசூல் சாதனை செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த சில நாட்களாகவே அமரன் படம் குறித்து செய்திதான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் அமரன் படத்தை போல ராணுவத்தை மையப்படுத்தி வெளிவந்த படங்களின் பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஆல் குவைட் ஆன் வெஸ்டர்ன் ஃப்ரண்ட் (All quiet on western front):
‘1929’ என்ற நாவலை மையப்படுத்தி வெளிவந்த படம் தான் ஆல் குவைட் ஆன் வெஸ்டர்ன் ஃப்ரண்ட். இந்த நாவலை வைத்து உருவான மூன்றாவது படம் இது. இதே தலைப்பில் 1930 , 1979 களில் இரண்டு வெர்சன் வெளியாகி இருந்தது. 2022 ஆம் ஆண்டு இதனுடைய மூன்றாவது வெர்சன் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. முதல் உலகப்போரை மையப்படுத்தி வெளியான படம் இந்த படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
ஃபுல் மெட்டல் ஜாக்கெட் (Full metal jacket):
இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஃபுல் மெட்டல் ஜாக்கெட். சிறந்த ராணுவ படங்களில் இந்த படமும் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. வியட்நாம் போருக்கு ராணுவ வீரர்கள் எப்படி தயாரிக்கிறார்கள் என்பதில் தொடங்கி இராணுவத்தினுடைய பல விஷயங்கள் இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறது. 1979 ஆம் ஆண்டு வெளியான ‘தி ஷார்ட் டைமர்ஸ்’ என்ற பயோகிராபி நாவலை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குனர் எடுத்திருந்தார்.
சேவிங் ப்ரைவேட் ரையன் ( Saving private ryan):
ஸ்டீவன் ஸ்பெல்பெர்க் சேவிங் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் சேவிங் பிரைவேட் ரையன். இந்த படமும் சிறந்த ராணுவப் படங்களில் ஒன்று. இந்த படத்திற்குப் பிறகு வந்த பல ராணுவ படங்களை எல்லாம் இந்த இந்த படத்தை இன்ஸ்பயராக கொண்டு தான் எடுத்தார்கள். இதனை பல பேட்டிகளில் இயக்குனர்களும் கூறி இருக்கிறார்கள். இதில் போர் காட்சிகளும், பயன்படுத்தப்பட்ட நுட்பங்களையும் இன்றும் பின்பற்றி வருகிறார்கள்.
ஃப்யூரி (Fury):
பிராட் பிட் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஃப்யூரி. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் அமெரிக்காவின் டேங்கரிகளின் நாஜிகளுக்கு எதிராக சண்டையிடப்பட்ட ராணுவ அதிகாரிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்தினுடைய இயக்குனர் டேவிட் ஐயரின் குடும்பத்தினர் ராணுவத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து ராணுவம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை கற்றுக் கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்.
ஷெர்ஷா (Shershah):
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் ஷெர்ஷா. இது கார்கில் போரில் உயிர் இழந்த ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் பயோகிராபியை கொண்டு எடுக்கப்பட்டது. நடிகர் சித்தார்த் மல்கோத்ரா இந்த படத்தில் பத்ரவாக நடித்திருந்தார். இந்த படம் தேசிய விருதையும் வென்றிருந்தது.
உரி – சர்ஜிகல் ஸ்டைர்க் (Uri- Surgical Strike):
பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் நடிப்பில் கடந்த 2019 வெளிவந்த படம் உரி – சர்ஜிகல் ஸ்டைர்க். இந்தியாவில் வெளியான சிறந்த ராணுவ படங்களில் இது ஒன்றாக கருதப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த உரி தாக்குதலை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்திருந்தார் இயக்குனர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் நமது தேசிய விருதையும் பெற்றிருந்தது.
ஹேக்ஸா ரிட்ஜ்(hacksaw ridge):
மெல் கிப்சன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் ஹேக்ஸா ரிட்ஜ். இது 2004 ஆம் ஆண்டு டெர்ரி பெனடிக்ட் இயக்கிய தி மனசாட்சியஸ் ஆப்ஜெக்டர் என்ற ஆவணப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.