எம்.ஜி.ஆராக நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் கோபி – இத பாத்து எத்தன பேர் திட்டப் போறாங்களோ ?

0
4772
gopi
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சதிஷ், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் போலவே வேடமிட்டு படத்தில் நடித்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இப்படி சதிஷ் எதில் நடித்தார் என்பது தான் தெரியவில்லை.

இதையும் பாருங்க : குளிக்கறதே இல்லையா ? மேக்கப் இல்லாம பக்க முடியல – ரேஷ்மாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலில் இவர் தனது முன்னாள் காதலியோடு தொடர்பில் இருப்பது போல தான் காண்பிக்கப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதில் ஒருவர் ‘இந்த கோபி பையன பாத்தாதான் எரிச்சல் ஆகுது. நல்ல பொண்டாட்டி கிடெச்சி இருக்கு அதன் அவனுக்கு கொழுப்பு ‘ என்று கமன்ட் செய்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த கோபி, சமூக வலைத்தளத்தில் இவரது கதாபாத்திரத்தால் பலரும் இவரை திட்டி தீர்த்து வரும் நிலையில் இதற்கு பதில் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் சதீஷ். ஆனால், அப்போதும் இவரை பலரும் திட்டி தீர்த்து வந்தனர். இதனால் கடுப்பான கோபி, மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு தயவுசெய்து கேட்கிறேன், அது ஒரு சீரியல் என்பதை மறக்க வேண்டாம். என்னிடம் வந்து. மோசமாக பேசுவது எப்படி நியாயமாகும் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவிக்க மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு “நான் புலம்பினேன். ஒப்பாரி வைத்தேன். ஆனால் நீங்கள் இவ்வளவு எனக்கு ஆதரவு தருவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. பலரும் எனக்காக ஆறுதலான வார்த்தைகளை அனுப்பி உள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி என்று மனம்வருந்தி கூறி இருந்தார்.

Advertisement