விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல சிரியலான பாக்கியலட்சிமி சீரியலில் நடித்து வரும் கதாநாயகனான கோபிக்கு பதிலாக கண்மணி சிரியலின் நடிகர் சஞ்சீவ் நடிக்க போவதாக தகவல் வெளியானதை அடுத்து பாக்கியலட்சிமி சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கி சீரியல்தான் பாக்கியலட்சிமி. இந்த சீரியலில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் நடித்து வருபவர் தான் நடிகர் சதிஷ்.1990 ஆண்டுகளில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கி மின்சார பூவே என்ற திரைப்படத்தின் மூலம் திரைத் துரையில் அறிமுகமாக்கினார்.
அதன் பின்னனர் மந்திர வாசல், சூலம், கல்யாண பரிசு 2, ஆனந்தம் என பல சிரியலிகளில் நடித்திருக்கிறார். அதன் பின்னர் கலைஞர் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு மாறி காராணி ஜோடி சுஜிதா தொடரில் நடித்தார். இப்படி பல சீரியல்களில் வில்லனானாகவும் , சிறு சிறு துணை கதாபாத்திரமாகவும் நடித்து வந்த சதீஸ் வாழ்க்கையை மாற்றியது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் தான்.
பாக்கியலட்சிமி சீரியல் :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலை பார்ப்பவர்கள் அனைவரும் கோபியை திட்டாத நாளே கிடையாது. தினமும் ஒரு எபிசோடை பார்த்து விட்டு கோபியின் கதாபாத்திரத்தை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் ஏராளம். சின்னத்திரையில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து வரும் ஒரே கதாபாத்திரம் கோபி தான். அதாவது மனைவியை ஏமாற்றி, காதலியுடன் ஊர் சுற்றுவது, அவரை இரண்டாவதாக திருமணம் செய்ய துடிப்பது அதற்காக குடும்பத்தையும் ஏமாற்றுவது என கோபியின் நகைச்சுவையான நடிப்பு இந்த சீரியலின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்றே சொல்லலாம்.
திரைப்படங்கள் :
தற்போது சீரியல்களில் கலக்கி வரும் நடிகர் சதீஸ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிரபல நடிகர் ஜெயம் ரவி நடித்திருந்த தனி ஒருவன், சியான் விக்ரம் நடித்திருந்த இரு முகன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பால கிருஷ்ணனின் இயக்கத்தில் எம். ஜி. ஆர். வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.
சதீஸ் சோக கதை :
இப்படி மகிச்சியாக இருக்கும் நடிகர் சதிஷ் தொடக்க வாழ்க்கை கேட்பவர்களை வருத்தமடைய வைக்க கூடியது. தனது ஐந்து வயதில் கூடப்பிறந்த தம்பியை இழந்து. அதன் பிறகு விபத்து ஒன்றில் தனது அம்மாவையும் அப்பாவையும் இழந்து எந்தவொரு ஆதரவுமின்றி இரண்டு சொக்கா மற்றும் டவுசரோடு சென்னையில் தனது அத்தை விட்டிருக்கு வந்ததாகவும். அத்தை தான் தன்னை ஆளாக்கியதாகவும் ஒரு வீடியோவில் கூறியிருந்தார் சதீஸ். அதன் பிறகு சினிமாவில் ஆர்வம் வந்து திரையில் நடிக்க வாய்ப்பு தேடியதாகவும் கூறியிருந்தார்.
வைரலாகும் புகைப்படம் :
இந்நிலையில் தற்போது சதீஸ் நடித்து வரும் பாக்யலட்சிமி சிரியலில் இவருக்கு பதிலாக நடிகை ராதிகாவுடன், சஞ்சீவ் நடிக்கவுள்ளார் என புகைப்படம் வெளியாகி வைரலானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியான நிலையில்தான் ராஜ் கமலா ஷூட்டிங் ஹவுஸ் புகைப்படத்துடன் இந்த விஷியத்தை பற்றி கூறியிருந்தனர். அதில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபி மாற்றப்படவில்லை என்றும். சஞ்சீவும், ரேஷ்மாவும் இணைந்து ஒரு புதிய விளம்பரப்படத்தில் நடித்து வருகின்றனர் அதுதான் அந்த புகைப்படம் என்று விளக்கமளித்திருந்த. இதனையடுத்துதான் பாக்கியலட்சிமி சீரியல் ரசிகர்கள் நிம்மதியும் பெருமூச்சை விட்டனர்.