தயவு செஞ்சி ஷிவாங்கியோட என்ன கம்பேர் பண்ணாதீங்க – பாக்கியலக்ஷ்மி சீரியலின் இளம் நடிகை.

0
35412
shivangi

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதிலும் இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார்.

பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான ஷிவாங்கி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அதில் பாதியிலேயே எலிமினேட் ஆனார்.அதன் பின்னர் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த சீசன் இறுதியில் ஷிவாங்கிக்கு ‘சிம்மக் குரல் சிங்காரி’ என்ற விருது வழங்கப்பட்டது.

இதையும் பாருங்க : மேலவளவு முருகேசன் தான் கர்ணனா ? 97 ல் நடந்த இந்த கொடூரமான சம்பவம் தான் இந்த படமா ? இதை பாருங்க.

- Advertisement -

முதல் சீசனை விட இந்த சீசனில் தான் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளாகினர். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகையுடன் ஒப்பிட்டதால் ஷிவாங்கி ரசிகர் ஒருவர் கடுப்பாக அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை. பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்ற கதாபத்ரத்தில் நடித்து வரும் நேஹா, வாணி ராணி சீரியலில் தேனு என்ற கதாபாத்திரத்தில் பிரபலமானவர்.

சமீபத்தில் இவரையும் ஷிவாங்கியையும் ஒப்பிட்டு மீம் ஒன்று வைரலானது. இதற்கு ரசிகர் ஒருவர். இந்த பதிவை பார்த்த நேஹா, நானும் அதை தான் சொல்கிறேன். என்னோடு ஷிவங்கியை ஒப்பிட வேண்டாம். அவர் வேற லெவல், நானே அவரின் பெரிய ரசிகை தான். எனவே,அவரோடு என்னோடு ஒப்பிட வேண்டாம். நோ டென்சன், Chill பண்ணுங்க என்று மிகவும் ஸ்வீட்டாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement