விரைவில் நிறைவடைய போகும் பிரைம் டைம் சீரியலில் – புதிய சீரியலில் ஹீரோவாக களமிறங்க இருக்கும் பாக்கியலட்சுமி ஆர்யன்.

0
996
aryan
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யன் புதிய தொடரில் ஹீரோவாக நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எவ்வளவு எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : படக்குழு மீது அதிருப்தியில் இருக்கிறாரா விக்ரம் ? அதனால் தான் ஆடியோ லாஞ்சுக்கு வரலையா ? ரசிகர்களை சமாதானம் செய்ய Lyca வெளியிட்ட அறிவிப்பு.

பாக்கியலட்சுமி சீரியல்:

பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியல் உச்ச கட்ட பரபரப்பில் எட்டி வருகிறது. அதிலும் கடந்த 2 வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான் காரணம். அதாவது, கோபி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கோபி குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

கோபி காதலிக்கும் பெண் ராதிகா தான் என்ற உண்மை பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. இதனால் பாக்கியா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். பின் வீட்டிற்கு வந்த கோபியிடம் கேள்வி கேட்கிறார் பாக்கியா. கோபி-ராதிகா இருவரும் பேசியதை வீட்டில் எல்லோரும் முன்னிலையிலும் பாக்கியா நிற்க வைத்து கேள்வி கேட்கிறார். கோபி வீட்டில் புயல் அடித்துக் கொண்டிருக்கின்றது. மேலும், வீட்டில் உள்ள எல்லோருக்கும் கோபி பற்றிய உண்மை தெரிந்தவுடன் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

செழியன் ரோலில் நடித்த நடிகர்:

இதற்கு பின் என்ன ஆகுமோ? கோபி-பாக்கியா பிரிந்துவிடுவார்களா? ராதிகா- கோபி திருமணம் நடக்குமா? என்ற பல கேள்விகளுடன் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் நடித்த நடிகர் ஆர்யன் தற்போது புது தொடரில் நடிக்க இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த தொடரின் ஆரம்பத்தில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஆர்யன். இவர் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

ஆர்யன் நடிக்கும் புது சீரியல்:

பின் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் நாயகி பார்வதி என்கிற சபானாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தற்போது இவர் புது சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். அதுவும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் கதாநாயகனாக ஆர்யன் கமிட்டாகியிருக்கிறார். அதற்கான புரோமோ எல்லாம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆர்யனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement