”நான் BJP இல்ல”கலைஞர், பெரியார் கருத்துகள்தான் என்னுள் ஊறிப்போய் உள்ளது, என்னை மன்னிச்சிடுங்க – பாக்கியராஜ் வெளியிட்ட வீடியோ.

0
374
bagyaraj
- Advertisement -

சமீபத்தில் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று பாக்கியராஜ் கூறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022″ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட,  திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். 

-விளம்பரம்-

மேலும், இந்த நூலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட பாக்கியராஜ் பெற்றுக்கொண்டார். பின் இந்த நிகழ்ச்சியில் பாக்கியராஜ் கூறியிருப்பது, அண்ணாமலை இங்கிருந்து கர்நாடகா சென்று சிறப்பாக பணியாற்றினார். நான் கர்நாடகத்தில் இருந்தபோது அவரைப் பற்றி பெருமையாகப் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். பாஜகவுக்கு சரியான தலைவரைத் தேர்வு செய்துள்ளார்கள். பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை தான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்.

- Advertisement -

சர்ச்சையை கிளப்பிய பேச்சு :

பிரதமர் வெளிநாடு செல்வதை ஒரு சிலர் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், அவர் ஓய்வில்லாமல் எப்படி சென்றார்? அவர் உடலை எப்படி கவனித்துக் கொள்கிறார்? என்று நான் ஆச்சரியமாக பார்த்தேன். இந்தியாவுக்கு இப்படி ஒரு துணிச்சலான பிரதமர் தேவை. பிரதமர் மோடியை விமர்சித்து வருபவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நல்லவர்கள் அவரைப் பற்றி தவறாக பேச மாட்டார்கள்.

குவியும் கண்டனங்கள் :

பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடியை புகழ்ந்து பாக்கியராஜ் பேசியுள்ளார். இப்படி இவர் பேசியிருக்கும் பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இவர் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்களை ஏளனமாக பேசிவிட்டார் என்று பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பாக்கியராஜ் வெளியிட்ட மன்னிப்பு வீடியோ :

இப்படி ஒரு நிலையில் இதற்க்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பாக்கியராஜ். மாற்றுத்திறனாளிகள் என்பதற்கும் குறைபிரசவம் என்பதற்கும் தொடர்பு இல்லை. நான் தவறாக கூறியிருப்பேன் என யார் நினைத்தாலும் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுகொள்கிறேன். நான் பிஜேபி கிடையாது. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் படித்து, தமிழ் மொழியில் சினிமா எடுத்து வருகிறேன். தமிழ்தான் சோறு போடுகிறது. 

திராவிடத் தலைவர்களின் சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கிறது

எனது மனதில் திராவிடத் தலைவர்களின் சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர், ஜீவா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் கருத்துகள்தான் என்னுள் ஊறிப்போய் உள்ளது. அந்த கருத்துகளின் அடிப்படையில்தான் சினிமா எடுத்துள்ளேன். தமிழ்நாட்டுக்குள் தமிழ் தலைவர்கள் என்ற மனநிலையில் தான் இருந்து வருகிறேன். இதுவரை நான் எடுத்த படங்களில் அதுதான் எதிரொலித்து வருகிறது. இனி எடுக்கும் படங்களிலும் அதுதான் எதிரொலிக்கும் என்று பேசி இருக்கிறார்.

Advertisement