இயக்குனர் ராஜன் மலைசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் “பூதமங்கலம் போஸ்ட்”. இந்த படத்தில் நடித்து உள்ள நடிகர்கள் எல்லாம் புதுமுகங்கள் தான். இந்த படத்தில் மவுனிகா ரெட்டி, அஸ்மிதா, விஜய் கோவிந்தசாமி, தட்சிணாமூர்த்தி, பந்தா பாண்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் அஸ்மிதா தவிர மற்ற நடிகர்கள் எல்லாம் புதுமுகங்கள் தான். இந்த படத்திற்கு அர்ஜுன் இசை அமைத்து உள்ளார். பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்து உள்ளார். நம்ம அரசியல்ல இருக்கலாம். நண்பர்களுக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்பது தான் கதை.
படத்தின் நாயகன் பணம், பதவி, அதிகாரம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் முன்னேறுவதற்கு அரசியலை பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் அதற்கான வழி கிடைக்கிறது. அப்பொழுது தான் தன் நண்பனால் சதி நடக்கிறது. பின் இருவருக்கும் நடைபெறும் போட்டியில் யார் அரசியல் அதிகாரத்தை கைபற்றினார்கள் என்பதை ஆக்சனுடனும், நகைச்சுவை கலந்தும் சொல்லி இருக்கிறார் இயக்குனர். தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதையும் பாருங்க : 4 வருடங்களாக சினிமாவில் தலை காண்பிக்காமல் இருந்த கரணா இது. லேட்டஸ்ட் வீடியோ இதோ.
இதில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ், தயாரிப்பாளர் கே ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாலிவுட்டில் மிக பிரபலமான ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் அமிதாப்பச்சன். இந்நிலையில் இவர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தை பார்த்து விட்டு அந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து நடிக்க ஆசை பட்டதாக சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பாக்யராஜ் அவர்கள் கூறியிருந்தார்.
வீடியோவில் 50 : 30 நிமிடத்திற்கு பார்க்கவும்
இந்த நிகழ்ச்சியின் போது இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் பேசியது, நான் நடித்த முந்தானை முடிச்சு படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவருக்குப் போட்டுக் காட்டினேன். அவர் நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் ஹிந்தியில் நான் இந்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார். ஆனால், என்னை படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்கள் பார்த்து விட்டார்கள். இந்த மாதிரி ரோலில் நடித்தால் என்னை ஏற்றுக் கொள்வார்களா? தெரியவில்லை என்று அமிதாப் பச்சன் கூறியிருந்தார்.
இருந்தாலும் முந்தானை முடிச்சு படம் அமிதாப் பச்சன் அவர்களுக்கு பிடித்துப் போனதால் தயாரிப்பாளரிடம் சொல்லி என் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன். நீங்களும் பட்ஜெட்டை குறைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை படம் எதிர்பார்த்தபடி அமையாமல் போனால் யாரும் கஷ்டப்படக் கூடாது என்று சொன்னார் அமிதாப் பச்சன். ஆனால், அமிதாப் பச்சன் சொன்னதற்கு தயாரிப்பாளர் ஒத்துக் கொள்ளவில்லை. மேலும், ஹிந்தியில் முந்தானை முடிச்சு படத்தில் கடைசி வரை நடிகர் அமிதாப் பச்சன் அவர்களால் நடிக்க முடியாமல் போனது என்று பாக்கியராஜ் தெரிவித்திருந்தார்.