4 வருடங்களாக சினிமாவில் தலை காண்பிக்காமல் இருந்த கரணா இது. லேட்டஸ்ட் வீடியோ இதோ.

0
71985
karan
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கரண். இவர் 1972 ஆம் ஆண்டிலேயே சினிமா உலகில் நுழைந்தார். இவர் தன்னுடைய சிறு வயதில் இருந்தே தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். தமிழில் கிரண் அவர்கள் முத்துராமன், கே ஆர் விஜயா நடித்த முருகன் அடிமை என்ற படத்தின் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். இவர் தன்னுடைய சிறு வயதிலேயே நிறைய படங்களில் நடித்ததால் இவர் ஏராளமான குழந்தை நட்சத்திர விருதுகள் இருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்பிள்ளை, காதல் கோட்டை, காலமெல்லாம் காத்திருப்பேன், காலமெல்லாம் காதல் வாழ்க, காதலி, நேருக்கு நேர், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, பட்ஜெட் பத்மநாபன், குங்குமப் பொட்டு கௌண்டர் போன்ற பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களில் நடித்து உள்ளார். கொக்கி திரைப்படம் மூலமாக தான் நடிகர் கரண் தமிழ் சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் கருப்பசாமி, காத்தவராயன், தம்பி வெட்டோத்தி சுந்தரம்,சூரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். பெரும்பாலும் இவர் படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் தான் நடிகர் கரண் அதிகம் நடித்து இருந்தார். மேலும், நடிகர் கிரண் அவர்கள் தமிழில் இதுவரை 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அட கொடுமைய இந்த காரணத்திற்காக மாஸ்டர் படத்தின் வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் புகழ்.

1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கரண் நடித்திருந்தார். இந்த படத்தில் கரண் வரும் காட்சி போதெல்லாம் ஷ்ரூவ்வ்வ்வ்.. என்ற இசை வரும். அந்த இசையை 2018 ஆம் ஆண்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பயங்கர டிரன்டிங் ஆக்கி இருந்தார்கள். சமீப காலமாகவே சினிமாவில் இருந்து நடிகர் கரண் விலகி உள்ளார். இவர் கடைசியாக உச்சத்துல சிவா என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் பல நாட்களுக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் கரன் அவர்கள் பிரபலமாக பேசப்பட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் தற்போது நடிகர் கரண் அவர்கள் ஐசரி கணேஷ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் 25 ஆம் ஆண்டு திருமண விழாவில் கலந்து கொண்டு உள்ளார். இவரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் குஷியாகி உள்ளனர். பின் எப்போது சினிமாவில் நடிக்க வர போகிறீர்கள் என்று கேள்வியும் எழுப்பி உள்ளார்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement