முதல் படத்துக்கு ஓகேயா, இப்போ அவன் சொட்டாயா இருக்கானே – கௌண்டமணியை ரிஜெக்ட் செய்த பாரதி ராஜா, அடம் பிடித்த பாக்யராஜ்

0
3984
Goundamani
- Advertisement -

“யோவ் முதல் படத்துக்கு அந்தாள போட்டோம் சரி இந்த படத்துக்குலாம் அவன் வேண்டாம்யா,முடி இல்லாம சொட்டைத் தலையோட நல்லாருக்கமாட்டான்யா”என பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகாவின் மச்சான் வேடத்திற்கு கவுண்டமணியை வேண்டவே வேண்டாம் என்கிறார். ஆனால் அஸிஸ்டெண்ட் டைரக்டர் பாக்யராஜ் விடாடிப்பிடியாக அந்த கேரக்டருக்கு கவுண்டமணியை பரிந்துரைக்க முதன்முறையாக ஒரு பெரிய கேரக்டர் கவுண்டமணிக்கு கிடைக்கிறது பாக்யராஜீன் முயற்சியால்.

-விளம்பரம்-

இதற்கு காரணம் என்னவென கேட்டால் எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்திருக்கும் நையண்டி சி மேன்ஷனில் கவுண்டமணி, சங்கிலி முருகன் ,கல்லாப்பெட்டி சிங்காரம் ,செந்தில் ,பாக்யாராஜ் என அனைவருமே ஒன்றாக தங்கியிருக்கிறார்கள்.இதில் பாக்யராஜை தவிர மற்ற அனைவருமே நாடக நடிகர்கள்.பின்னாளில் பாக்யராஜ் பெரிதாக ஜெயித்த பிறகு இவர்கள் எல்லாரையுமே தன் படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

- Advertisement -

ஆக கிழக்கே போகும் ரயிலில் கவுண்டமணி பெரிதாக பேசப்பட பாக்யராஜீன் கணிப்பு இங்கு சரியாகிறது.அதை தொடர்ந்து பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாவிலும் கமலின் ஆபிஸில் குமாஸ்தாவாக கவுண்டமணி நடித்திருப்பார்.இதிலும் பாக்யராஜீன் பங்கு அதிகம்.

இதன்பிறகு திரும்பவும் பாரதிராஜாவின் நான்காவது படைப்பான புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராஜ் ஹீரோ.
இதில்தான் கவுண்டமணிக்கு ஒரு எக்ஸட்ரானரி கேரக்டரை பாரதிராஜாவும் பாக்யராஜீம் உருவாக்கியிருப்பார்கள்.
இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் கவுண்டமணி ரசிகர்கள் எல்லாருமே ஓர்தடவை புதிய வார்ப்புகள் கவுண்டமணியை ஒருதடவை பாக்கனும்.

-விளம்பரம்-

அதன்பிறகு பாக்யராஜ் இயக்கிய முதல் படமான சுவரில்லாத சித்திரங்களில் வரும் காளியண்ணன் கேரக்டர் இன்னும் கவுண்டமணியை ஒருபடி மேலே எடுத்துச் சென்றது.முக்கியமா

சரோசா

என்ன டெய்லர்

குப்ப கொட்ரியா

ஆமா டெய்லர்

கொட்டு கொட்டு

என்கிற வசனம் அவ்வளவு யுனிக்காக கவுண்டமணிக்காகவே எழுதப்பட்டது போல இருக்கும்.அவருக்கும் காஜா ஷெரீப் க்கும் இருக்கும் சின்ன சின்ன சண்டைகள் இன்னும் நன்றாகவே வொர்கஅவுட் ஆகியிருக்கும்.அதற்கு முக்கிய காரணம் கவுண்டமணியின் வசனங்கள். இங்கே

பதினாறு வயதினிலே
கிழக்கே போகும் ரயில்
புதிய வார்ப்புகள்
சுவரில்லாத சித்திரங்கள்
பயணங்கள் முடிவதில்லை

என ஆரம்பகால கவுண்டணியின் படங்களில் அற்புதமான நகைச்சுவை கலந்த ஒரு நல்ல குணச்சித்திர நடிப்பு வெளிப்பட்டிருக்கும்.அக்கால கவுண்டமணியை ரசிப்பதென்பது இன்னும் அலாதியாகவே இருக்கும்.

அதன்பிறகே சிலவருடங்கள் கழித்து கவுண்டமணிக்கு செந்தில் என்னும் ஓர் இணை கிடைத்து சகாப்தம் படைக்கிறார்கள்.அதிலும் என்னதான் காமெடியன் என்றாலும் கதையில் ஓர் முக்கிய கேரக்டராகவே இருந்திருப்பார்.அதற்கு சின்னக்கவுண்டர் படத்தில் அவருக்கென வடிவமைக்கப்பட்ட கேரக்டர் ஓர் உதாரணம்.

இங்கே எப்போதெல்லாம் நாம் கவுண்டமணியை கொண்டாடுகிறோமோ அப்போதெல்லாம் அதில் பாக்யராஜ் இருக்கவேண்டும் என்பது என் ஆசை.ஏனென்றால் ஆரம்பகாலத்தில் அவர் மூலமாகவே கவுண்டமணி வடிவமைக்கப்பட்டிருக்கிறார்.

Advertisement