பாக்யராஜ் இயக்கி நடித்து வெளிவராத படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படம் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த திரை கதை இருக்கும் படங்களை எடுப்பது தான் பாக்கியராஜின் தனி சிறப்பு.
இப்படி தொடர்ந்து படங்களை இயக்கி வந்த பாக்கியராஜ் நடிகராகவும் கொடிகட்டி பறந்தார். இறுதியாக தன் மகனை வைத்து ‘சித்து +2’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் பாக்யராஜ் படத்தை இயக்குவது இல்லை என்றாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார் பாக்யராஜ் மகன் சாந்தனு.
பாக்யராஜ் நடித்த கடைசி படம்:
அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக பாக்கியராஜ் அவர்கள் தன் மகனுடன் இணைந்து புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்நிலையில் பாக்கியராஜ் இயக்கி நடித்த படம் வெளிவரவில்லை என்றாலும் அந்த படத்தின் பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிடித்திருக்கிறது.
காவடி சிந்து படம்:
அதைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். எண்பதுகளின் இறுதியில் பாக்கியராஜின் சில படங்கள் சறுக்கி இருந்தாலும் அப்போது அவர் தொடங்கிய படம் காவடி சிந்து. இந்த படத்தில் பாக்யராஜ் கதாநாயகன். அமலா கதாநாயகி. இளையராஜாவுடன் அப்போது பாக்கியராஜ் கருத்து வேறுபாட்டில் இருந்ததால் அனைத்து பாடல்களையும் வாலி எழுதி இருந்தார். மொத்தம் 10 பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முறைப்படி காவடி சிந்து படத்தின் படப்பிடிப்பை தொடங்கி இருந்தார்கள்.
காவடி சிந்து நின்று போனது:
இடையில் ஏதோ சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. ஆனால், படத்தின் பாடல்கள் எல்லாம் எடுக்கப்பட்டது. அதில் ஒன்று தான் சாமக் கோழி கூவியது பாடல். இது பயங்கர ரொமான்ஸ் பாடல் என்று சொல்லலாம். இந்த பாடலில் அமலா, பாக்யராஜ் இருவரும் மிக நெருக்கமான ரொமான்ஸ் காட்சியில் நடித்திருப்பார்கள். இந்த படம் மட்டும் வெளிவந்திருந்தால் அப்போது அமலா கனவுக்கன்னி ஆகியிருப்பார். ஆனால், இந்தப்பாடல் சி.பி கோலப்பன் இயக்கத்தில் பட்டணம் தான் போகலாமடி என்ற படத்தில் இடம்பெற்றிருந்தது.
காவடி சிந்து பாடல்:
அதாவது இந்த படத்தை ஆரம்பித்த போது பாக்யராஜிடமிருந்து காவடி சிந்து படத்திற்காக போட்ட சாமக்கோழி கூவியாச்சு, எட்டுமுழ வேட்டி கட்டி, என்னென்னவோ கேட்கும் வயசிது ஆகிய மூன்று பாடல்களையும் வாங்கிக் கொண்டனர். பின் சென்னை வரும் ராதிகா, ரூபினி இருவரும் சென்னை உதயம் காம்ப்ளக்ஸை பார்த்து பிரமித்துப் போய் அதில் படம் பார்க்கச் செல்வார்கள். அப்போது பாக்யராஜ் நடித்த சாமகோழி பாடல் திரையில் ஓடுவது போன்று காண்பிக்கப்பட்டு இருக்கும். இந்த படம் சுமார் என்றாலும் பாக்கியராஜின் சாமகோழி பாடல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது.