இளையராஜா உடன் இருந்த கசப்பான அனுபவங்களை இசையமைப்பாளர் பரணி பகிர்ந்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசையை மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது.
மேலும், இவர் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.
இளையராஜா திரைப்பயணம்:
இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று. இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். தற்போது இளையராஜாவின் பயோபிக் படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி எடுக்க இருக்கும் தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே இளையராஜாவை குறித்து பலரும் மனம் திறந்து பேசி வருகிறார்கள்.
பரணி அளித்த பேட்டி:
அது மட்டும் இல்லாமல் அவருடன் இருந்த கசப்பான அனுபவங்களையும் பல பேர் பகிர்ந்து இருக்கிறார்கள் இந்த நிலையில் தற்போது பரணியும் இளையராஜாவை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, பொதுவாகவே இளையராஜா மனிதர்களுக்கு எந்த உதவியும் பெரிதாக செய்ய மாட்டார். கடவுளுக்கு தான் அவர் எல்லாமே செய்வார். மூகாம்பிகை கோயிலுக்கு மூன்று லட்சம், அண்ணாமலை கோயிலுக்கு இரண்டு லட்சம் என்று வாரி வழங்குவார். ஆனால், மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து யாரையும் வளர்த்து விட மாட்டார்.
இளையராஜா செய்த செயல்:
அப்படி வளர்த்து விட்டார்களா? என்று பார்த்தாலும் யாரும் கிடையாது. அதற்கு காரணம், கோயில்களில் இளையராஜாவின் பெயர் எழுதலாம். ஆனால், மனிதர்கள் எழுதுவார்களா? அப்படித்தான் ஒருநாள் மாற்றுத்திறனாளி ஒருவர் வாய்ப்பு கேட்டு தன்னுடைய ஒற்றைக்காலுடன் இளையராஜாவை சந்திக்க வந்திருந்தார். அவர் இளையராஜாவை பார்த்து, கை கால் உதற கடவுள் தான் உங்களிடம் என்னை அனுப்பி இருக்கிறார் என்று கூறியிருந்தார். உடனே இளையராஜா, கடவுள் என்னிடம் இதைப் பற்றி சொல்லவே இல்லையே என்று கிண்டல் அடித்து சென்றுவிட்டார்.
இளையராஜாவின் உண்மை முகம்:
இப்படி அவர் சாதரண மக்களை மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரையும் அவமானம் செய்து இருக்கிறார். மேலும் இளையராஜா முழுக்க முழுக்க பிராமின் சமூகம் பக்கமே சென்று விட்டார். கிட்டத்தட்ட அவர் ஒரு பிராமின் போலவே மாறிவிட்டார் என்று சொல்லலாம். அவருக்கு மோடியை எந்த விதத்தில் பிடித்தது என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியாக நிறைய பாடல்கள் எல்லாம் பாடி இருக்கிறார். இசையமைப்பாளர் ஆனதும் அந்த பக்கமாகவே மாறிவிட்டார். இது கங்கை அமரன் சாருக்கு தான் தெரியும் என்று கூறி இருக்கிறார்.