என்னோட துரதிர்ஷ்டமா இல்ல தனுஷ் அதிர்ஷ்டமா தெரியல – தான் தவறவிட்ட சூப்பர் ஹிட் படம் குறித்து பேசிய பரத்.

0
314
bharath
- Advertisement -

தனுஷின் பிளாக் பஸ்டர் படத்தை மிஸ் செய்து விட்டேன் என்று பரத் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக பரத் திகழ்ந்து வருகிறார். இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் காதல், வெயில், பட்டியல், எம்டன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Miral

மேலும், சமீப காலமாக இவரது சில படங்கள் தோல்வியில் முடிந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியினால் புது புது கதைகளத்துடன் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த காளிதாஸ் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதேபோல் நடிகர் பரத் அவர்கள் சரண் குமார் இயக்கத்தில் நடுவண் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் பரத் உடன் அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், பாலா உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

பரத் நடிக்கும் படங்கள்:

இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது நடிகர் பரத் அவர்கள் ஒரு பாலிவுட் படத்திலும், மலையாள படத்திலும் நடித்து வருகிறார். தாய்லாந்தில் நடந்த சம்பவத்தை மையப்படுத்திய கதையில் பரத் நடித்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு தாய்லாந்தில் பெய்த கனமழையால் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்தது. இதனால் திடீரென்று தாம் லுங் குகைக்குள் 12 பேர் சிக்கி இருந்தனர்.

ஆக்சன் 22 படம்:

அதில் சிறுவர் கால்பந்து அணியும், பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டு இருந்தார். ஒன்பது நாட்களுக்குப் பிறகு தான் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இந்த சம்பவத்தை மையமாக வைத்து தான் பரத் மலையாளத்தில் படம் நடிக்கிறார். அந்த படத்திற்கு ஆக்சன் 22 என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சந்திரன் திக்கோடி என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

-விளம்பரம்-

பரத் மிஸ் செய்த படம்:

இந்த படத்தில் பரத், சபரீஷ் வர்மா, இர்ஷாத் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் பிளாக்பஸ்டர் படத்தை மிஸ் செய்து விட்டேன் என்று பரத் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பரத் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவரிடம் மிஸ் செய்த படம் குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு பரத் கூறியிருந்தது, தனுஷுடைய நடிப்பில் வெளிவந்திருந்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தை நான் மிஸ் செய்தேன். அந்த படத்தின் கதையை சொல்லும்போது நான் தவறாக புரிந்து கொண்டு கணக்கு போட்டு விட்டேன்.

திருவிளையாடல் ஆரம்பம்:

அந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால், அந்த ஆண்டிலேயே அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது. அது என் துரதிர்ஷ்டமா இல்ல தனுஷ் அதிர்ஷ்டமா தெரியல. அது வருத்தமாக எனக்கு இருந்தது என்று கூறியிருக்கிறார். பூபதி பாண்டியன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் திருவிளையாடல் ஆரம்பம். இந்த படத்தில் தனுஷ், ஸ்ரேயா சரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

Advertisement