முதன் முறையாக தனது இரட்டை குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் பரத்.!

0
1599
Bharath-wife
- Advertisement -

தமிழ் சினிமாவின் இளம் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் பரத் 1984ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். பரத்திற்கு ஒரு தங்கை இருக்கிறார், அவருடைய பெயர் ப்ரீத்தி. தமிழில்
சங்கரின் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன்பின்னர், செல்லமே, காதல், பட்டியல், வெயில் உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்தார்.சிறு வயதில் இருந்தே டான்சில் மிகவும் ஆர்வமாக இருக்கும் பரத், ஒரு சர்வதேச நடன பள்ளியில் சேர்ந்து டான்ஸ் கற்றுக்கொண்டார். மலையாளத்தில் இவர் நடித்த ‘தி 4 பீப்பில்’ படம் 2004ல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.

- Advertisement -

இவருக்கு ஜெஸ்லி ஜோஸ்வா என்கிற மனைவி உள்ளார். இவர் பரத்தின் சிறு வயது நண்பராவார் . ஜெஸ்லி துபாயில் பிறந்தவர். அங்கு படித்து பட்டம் பெற்ற பல் மருத்துவர் ஆவார்.பல ஆண்டுகள் நண்பர்களாக இருந்த இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த 5 வருடங்களாக குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த நடிகர் பரத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் நடிகர் முதன் முறையாக தனது குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement