டோலிவுட்டில் ஹீரோவாக களமிறங்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் – இயக்குனர் யார் தெரியுமா ?

0
525
Akilan
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. காதல், குடும்பம் என எல்லாம் கலந்த கலவை தொடராக உள்ளது. இந்த பாரதி கண்ணம்மா சீரியல் மலையாள மொழியில் “கருத்த முத்து” என்ற தொடரின் தழுவல். மேலும், இந்த சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி தேவி அச்சு அசலாக ரோஷினி போலவே இருக்கிறார். மேலும், புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனிடையே வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரினாவுக்கு குழந்தை பிறந்திருப்பதால் சீரியலில் இருந்து அவருடைய காட்சிகள் மட்டும் காண்பிக்காமல் இருந்தார்கள்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் அகிலன்:

பின் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரினா மீண்டும் வில்லியாக சீரியலில் என்றி கொடுத்து விட்டார். இதனிடையே ரோஷினி சீரியலில் இருந்து விலகியவுடன் அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலனும் இந்த தொடரில் இருந்து வெளியேறி இருந்தார். பின் சினிமாவில் நடித்து வருவதால் தான் சீரியலில் இருந்து வெளியேறியதற்கு காரணம் என்று பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். மேலும், அகிலன் பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து விலகிய பிறகு ஆல்பம் பாடல்களில் நடித்திருந்தார்.

வீரமே வாகை சூடும் படம்:

அதற்கு பிறகு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வீரமே வாகை சூடும் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை து.பா. சரவணன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் தயாரித்திருக்கிறார். மேலும், படத்தில் டிம்பிள் ஹயாத்தி , யோகி படத்தில் ரமணா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அகிலன் நடிக்கும் தெலுங்கு படம்:

இந்த நிலையில் அகிலன் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் படம் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அகிலன் அவர்கள் முதல் முறையாக தெலுங்கு படமொன்றில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர், நான் புதிய பிராஜக்ட் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறேன். நான் நடிக்கும் படத்தை ரவிசங்கர் என்பவர் தயாரிக்கிறார். இயக்குனர் பானு சங்கர் படத்தை இயக்குகிறார்.

வைரலாகும் அகிலனின் டீவ்ட்:

மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது அகிலனின் இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகிறார்கள். அதேபோல் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகி இருக்கிறார். தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியிருக்கிறார். அதோடு அந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement