சீரியலுக்காக விஜய் படத்தின் வாய்ப்பை தவறுவிட்டுள்ள பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.

0
16309
vijay-64

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். இந்த படம் மாபெரும் வசூல் சாதனை செய்திருந்தது. அதோடு இந்த படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் பெண்களின் கால்பந்தாட்ட போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் நயன்தாரா ,யோகிபாபு, இந்திரா, இந்துஜா,ரெபா மோனிகா, ஆனந்தராஜ், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படத்தில் நடிகர் விஜய் அவர்கள் மைக்கேல் மற்றும் ராயப்பன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Vijay

இந்நிலையில் தளபதி விஜயின் பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் காவ்யா அவர்களே பேட்டியில் கூறியுள்ளார். விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி ஒளிபரப்பானது “பாரதி கண்ணம்மா” சீரியல். இந்த சீரியல் காதல், பாசம், குடும்பம் என எல்லாம் கலந்த கலவை தொடராக உள்ளது. இந்த தொடர் மலையாள மொழியில் ஒளிபரப்பான கருத்தமுத்து என்ற தொடரின் தழுவல் ஆகும். இந்த சீரியலில் பாரதியாக மேயாதமான் படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ரோஷினி நடிக்கிறார். இந்த சீரியலில் கதாநாயகனின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை காவ்யா.

- Advertisement -

இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிகை காவ்யா இந்த சீரியல் மூலம் பிரபலமானார். சமீபத்தில் நடந்த பேட்டியில் நடிகை காவியா அவர்கள் பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் தவறவிட்டது குறித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியதில், பிகில் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. பின் எனக்கு போன் பண்ணி திண்டிவனத்துக்கு சூட்டிங்கிக்கு காலை 11 மணிக்கு வந்துருங்கன்னு சொன்னாங்க. நானும் ஓகே என்று சொல்லிட்டேன். ஆனால், அன்று தான் எனக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து சூட்டிங் வர சொன்னாங்க.

நான் எப்பவுமே எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அந்த சமயத்துக்கு ஏத்த மாதிரி முடிவெடுத்துவிட்டேன். அதுக்கு முன்னாடியே எதையும் யோசித்து வைத்து செய்ய மாட்டேன். அதனால எனக்கு அப்ப பாரதி கண்ணம்மா சீரியல் சூட்டிங் போலன்னு நினைச்சு போயிட்டேன். அப்ப எனக்கு பிகில் படத்துக்கு போலாம் என்று தோணல. ஆனால், இப்ப எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கு. தளபதி படத்தை மிஸ் பண்ணிட்டேமே என்று வருத்தத்துடன் கூறினார்.

-விளம்பரம்-
Advertisement